யோகி பாபுவின் லெக் பீஸ் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியானது!

Published : Mar 29, 2025, 01:53 PM ISTUpdated : Mar 30, 2025, 09:42 PM IST

யோகி பாபுவின் காமெடி கலாட்டாவாக உருவாகியுள்ள 'லெக் பீஸ்' திரைப்படம் தற்போது ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.  

PREV
14
யோகி பாபுவின் லெக் பீஸ் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியானது!

வித்தியாசமான கதைக்களத்தை எதிர்பார்க்கும் ரசிகர்களுக்கு, காமெடி விருந்து ( Comedy Movie) வைக்கும் விதமாக வெளியான படம் தான் 'லெக் பீஸ்'. 4 கதாநாயகர்களை ஹீரோவாக வைத்து இந்தப் படத்தை, நடிகரும் - இயக்குனருமான ஸ்ரீநாத் இயக்கி உள்ளார். 

24
லெக் பீஸ் திரைப்படத்தின் வித்தியாசமான கதைக்களம்

இந்தப் படத்தில், மணிகண்டன், கருணாகரன், ரமேஷ் திலக் மற்றும் ஸ்ரீநாத் ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்கள் 4 பேருக்கும், ஒரு 2000 நோட்டு கிடைக்கும் நிலையில் அதை பங்கு போடுவதில் இவர்கள் 4 பேருக்கும் பிரச்சனை ஏற்பட, 4 பேரும் பாரில் சென்று குடிக்க முடிவு செய்கிறார்கள். இந்த பாரின் முதலாளியாக இருக்கும், மொட்டை ராஜேந்திரன் அது கள்ளநோட்டு எனக் கூற, பிரச்சனை வருகிறது.

 

34
லெக் பீஸ் திரைப்படம்

4 பேரையும் தன்னுடைய பாரில் உள்ள அடியாட்களைக் கொண்டு மொட்டை ராஜேந்திரன் பிடித்து வைத்துக் கொள்ள... பாரில் ஒரு அசம்பாவிதம் நடக்கிறது. பின்னர் ஒரு பெரிய பிரச்சனையில் சிக்கும் இவர்கள் எப்படி அதில் இருந்து தப்பிக்கிறார்கள் என்பதே இந்தப் படத்தின் கதைக்களம். விறுவிறுப்பான மற்றும் முழுக்க முழுக்க காமெடி கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில், முக்கிய வேடத்தில், விடிவி கணேஷ், ரவி மரியா, மைம் கோபி, ஜான் விஜய், சரவண சுப்பையா, ஜி.மாரிமுத்து, மதுசூதன ராவ் என பலர் சின்ஹா படத்தில் நடித்துள்ளனர். யோகி பாபு ( Yogi Babu's Leg Piece ) கேமியோ ரோலில் நடித்துள்ளார்.

44
ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவில்லை

கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும், இந்தப் படம் ஒரு புது முயற்சி என பாராட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து தற்போது இந்தப் படத்தை திரையரங்கில் பார்க்க மிஸ் செய்தவர்களுக்கு விஷ்வல் ட்ரீட் கொடுக்க, ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி டென்ட் கொட்டா ஓடிடி தளத்தில் இந்த படம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் இன்னும் தேதி அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Read more Photos on
click me!

Recommended Stories