நடிகை ஸ்ருதிஹாசன் வாரிசு நடிகை என்கிற அடையாளத்தோடு, தென்னிந்திய சினிமாவில் அறிமுகமாகி இருந்தாலும், தன்னுடைய தந்தையின் பெயரை எந்த இடத்திலும், பயன்படுத்தாமல் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என திரையுலகில் தனக்கென தனி முத்திரை பதித்தவர். இவரின், நடிப்புக்கு எந்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு உள்ளதோ... அதையே மிஞ்சும் விதத்தில் இவருடைய குரலுக்கு பல ரசிகர்கள் உள்ளனர்.
தற்போது தமிழில் ஒரு படம் கூட இவரது கை வசம் இல்லை என்றாலும், தெலுங்கில் மூன்று படங்களில் நடித்து வருகிறார். அவ்வப்போது வித்தியாசமான புகைப்படங்கள் மற்றும் தன்னுடைய காதலருடன் எடுத்து கொள்ளும் புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.