உடல் மாறுபாட்டை ஏற்றுக்கொண்ட நடிகை வெளியிட்ட பதிவுகள் "பலருக்கும் ஊக்கமளிக்கக் கூடிய ஒன்றாக உள்ளது. அதோடு சுய காதல் மற்றும் உடல் பாசிட்டிவிட்டி பற்றிய செய்திகளால் அவர் ரசிகர்களை ஊக்கப்படுத்தி உள்ளார். முன்னதாக இவர் கடந்த மூன்று ஆண்டுகளில் விடுதலை என்ற தத்துவத்தை நம்புவதன் மூலம் ஒரு நபராக எப்படி வளர்ந்தார் என்பதை பகிர்ந்தா சமீரா, " நமக்கு நாமே உண்மையாக இருப்பதே முன்னோக்கி செல்லும் ஒரு வழி. வயது, எடை, பணம், உறவுகள், சுயமதிப்பு, வெற்றி இவை அனைத்தையும் நீங்கள் எப்படி பார்க்க வேண்டும் என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று எழுதியிருந்தார்.