ஒரு நடிகையாக எத்தனை படங்கள் நடித்திருந்தாலும், எவ்வளவு பணம் சம்பாதித்திருந்தாலும்... தாய்மையில் உள்ள மகிழ்ச்சியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அப்படி பட்ட தாய்மையின் மகிழ்ச்சியை தான் தற்போது காஜல் அகர்வால் அனுபவித்து வருகிறார். சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்ட்டிவாக இருக்கும் காஜல் அவ்வப்போது தன்னுடைய கணவர், குழந்தை, மற்றும் குடும்பத்தினருடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.