பிரபல இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றிபெற்ற கே.ஜி.எஃப் திரைப்படத்தின் முதல் பாகம், மற்றும் இரண்டாவது பாகம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.
இவர்களை தொடர்ந்து, கே.ஜி.எஃப் படத்தின் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டியும் தாறுமாறாக சம்பளத்தை உயர்த்தியுள்ளார். கே.ஜி.எஃப் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிப்பதற்கே... 2 கோடி ரூபாய், இவர் சம்பளமாக பெற்றதாக கூறப்பட்ட நிலையில் 'கோப்ரா' படத்தில் நடிக்க அதை விட மூன்று மடங்கு சம்பளம் அதிகமாக பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால் இதுகுறித்து எந்த வித அதிகார பூர்வ தகவலும் இதுவரை வெளியாகவில்லை. எனினும் முதல் படத்திலேயே நயன்தாராவை ஸ்ரீநிதி ஷெட்டி மிஞ்சிவிட்டதாக பேசப்பட்டு வருகிறது.