சினேகா தன்னுடைய மகள் பிறந்த பின்னர் திரைப்படங்களில் நடிக்காமல் குழந்தை வளர்ப்பில் கவனம் செலுத்தி வந்தார். மேலும், குழந்தை பெற்ற பின்னர் எடை கூடியும் காணப்பட்டார்.
24
ஆனால் தற்போது அவருடைய மகன் - மகள் இருவருமே நன்கு வளர்ந்து விட்டதால், உடல் எடையை பாதியாக குறைத்து... மீண்டும் திரைப்படங்கள் நடிப்பதில் கவனம் செலுத்த துவங்கியுள்ளார். அந்த வகையில் தற்போது, ஷாட் பூட் திரி என்கிற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இதற்க்கு முன்னர், கடைசியாக சினேகா நடிப்பில், கடந்த 2020 ஆம் ஆண்டு தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்திருந்த 'பட்டாஸ்' படத்தில் அப்பா தனுஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படத்தில், பழங்கால தற்காப்பு கலையான, அடிமுறை பற்றி ரசிகர்களுக்கு தெரிவிக்கும் விதமாக இப்படம் வெளியானது. இந்த படத்திற்காக அடிமுறை பயிற்சி பெற்று நடித்திருந்தார் சினேகா. அந்த சமயத்தில் சினேகா கர்ப்பமாக இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
44
மீண்டும் திரைப்படங்களில் கவனம் செலுத்த துவங்கியுள்ளதால், அவ்வப்போது தன்னுடைய அழகிய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மனதை கொள்ளையடித்து வருகிறார்.அந்த வகையில், தற்போது அழகிய பட்டு புடவையில்... தேவதை போல் மின்னும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சிலவற்றை, சினேகா வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.