கணவர் இறந்த பின்னர்.. முதல் முறையாக தோழிகளுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை வெளியிட்ட நடிகை மீனா!

First Published | Aug 8, 2022, 11:17 AM IST

நடிகை மீனா, தன்னுடைய கணவர் வித்யா சாகர் இறந்த பின்னர், தற்போது முதல் முறையாக தன்னுடைய தோழிகளும், பிரபல நடிகைகள் சிலருடன் எடுத்த கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
 

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகும் பலர், ஹீரோயினாக ரசிகர்கள் மனதில் நிலையான இடத்தை பிடித்து விடுவது இல்லை. ஆனால், மீனா, ஸ்ரீதேவி, போன்ற சிலருக்கு மட்டுமே இந்த அதிர்ஷ்ட வாய்ப்பு வசப்படுகிறது. அப்படி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 'அன்புடன் ரஜினிகாந்த்' படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து, பின்னர் முன்னணி ஹீரோயினாக பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தவர் மீனா.

கடந்த 2009-ம் ஆண்டு, வித்யா சாகர் என்கிற தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு நைனிகா என்கிற மகளும் உள்ளார். அம்மா மீனாவை போலவே நைனிகாவும் குழந்தை நட்சத்திரமாக விஜய் நடித்த 'தெறி' படத்தில் அறிமுகமாகி ரசிகர்கள் மனதை தன்னுடைய மழலை பேச்சால் கொள்ளை கொண்டார் நைனிகா.

மேலும் செய்திகள்: குஷ்புவை தொடர்ந்து... பிரபல நடிகைகள் வீட்டுக்கு 3 குழந்தைகளுடன் விசிட் அடித்த ரம்பா! இது தான் காரணமா?


meena

சிறந்த நடிகை என்பதை திரையுலகில் நிரூபித்தது போலவே, ஒரு மனைவியாகவும், அம்மாவாகவும் சிறப்பாக செயல்பட்டார் மீனா. அதே நேரம், தமிழ், மலையாளம், தெலுங்கு போன்ற மொழிகளில் தரமான கதாபாத்திரத்தை தேர்வு செய்து நடித்து வருவதையும் வழக்கமாக வைத்திருந்தார்.

இந்நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக, நுரையீரல் பிரச்சனை காரணமாக வித்யா சாகர் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை மேற்கொண்டு வந்த போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது மறைவு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்திய நிலையில், ரஜினிகாந்த் உட்பட பல முன்னணி பிரபலங்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.

மேலும் செய்திகள்: விஜய் சேதுபதியுடன்... இந்த பிறந்தநாளை பிரமாண்டமாக கொண்டாடிய மாளவிகா மோகனன்..! வைரலாகும் போட்டோஸ்!

வித்யா சாகர் உயிர் இழந்து ஒரு மாதத்திற்கு மேல் ஆகும் நிலையில், மெல்ல மெல்ல... கணவர் இழப்பில் இருந்து மீண்டு வரும் மீனா மற்றும் அவரது மகள் நைனிகா ஆகியோரை, அவரது நெருங்கிய தோழிகளும், பிரபல நடிகைகளுமான சங்கவி, சங்கீதா, ரம்பா ஆகியோர் சந்தித்துள்ளனர்.

ரம்பா, சங்கவி, சங்கீதா ஆகியோர் தங்களுடைய குடும்பத்துடன் வந்து... மீனாவை சந்தித்த புகைப்படங்களை, அவரே வெளியிட்டுள்ளார். கணவர் இறந்த பின்னர் முதல் முறையாக இவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து, அவரை சந்திப்பது மகிழ்ச்சி என ரசிகர்கள் தங்களுடைய கமெண்ட் மூலம் தெரிவித்து வருகிறார்கள். இந்த புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்: கமல்ஹாசன் இங்க பிறக்கவேண்டிய ஆளே கிடையாது... டிஸ்கோ சாந்தி என்ன சொல்லி இருக்காங்க தெரியுமா?

Latest Videos

click me!