ஜிகுஜிகு உடையில் சிக்கென போஸ் கொடுத்து... கிளாமர் குயினாக மின்னும் ஐஸ்வர்யா மேனன் - வைரலாகும் ஹாட் கிளிக்ஸ்

Published : Aug 08, 2022, 10:11 AM ISTUpdated : Aug 08, 2022, 10:23 AM IST

Iswarya Menon : ரசிகர்களை கவரும் விதமாக விதவிதமாக போடோஷூட் நடத்துவதை வழக்கமாக வைத்துள்ள ஐஸ்வர்யா மேனன், தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

PREV
14
ஜிகுஜிகு உடையில் சிக்கென போஸ் கொடுத்து... கிளாமர் குயினாக மின்னும் ஐஸ்வர்யா மேனன் - வைரலாகும் ஹாட் கிளிக்ஸ்

ஈரோட்டை சேர்ந்தவர் நடிகை ஐஸ்வர்யா மேனன். இவரது குடும்பத்தினர் கேரளாவை சேர்ந்தவர்களாக இருந்தாலும், நடிகை ஐஸ்வர்யா மேனன் பிறந்து வளர்ந்தது, படித்தது எல்லாமே ஈரோட்டில் தான். பக்கா தமிழ் பெண்ணான இவர், கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய காதலில் சொதப்புவது எப்படி படம் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

24

இதன் பின்னர் ஆப்பிள் பெண்ணே, சுந்தர் சி இயக்கிய தீயா வேலை செய்யனும் குமாரு போன்ற படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்த ஐஸ்வர்யா, கடந்த 2017-ம் ஆண்டு வெளியான வீரா படத்தில் நடிகர் கிருஷ்ணாவுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக எண்ட்ரி கொடுத்தார். இதையடுத்து தமிழ் படம் 2-வில் சிவாவுக்கு ஜோடியாக நடித்தார்.

இதையும் படியுங்கள்... ‘இந்தி தெரியாது போடா’னு சொல்லிட்டு... இப்போ இந்தி படத்தை வெளியிடுவது ஏன்? - சர்ச்சைகளுக்கு உதயநிதி சொன்ன பதில்

34

இதன்பின்னர் ஹிப்ஹாப் ஆதியின் நான் சிரித்தால் படம் தான் ஐஸ்வர்யா மேனனை மக்கள் மத்தியில் பேமஸ் ஆக்கியது. இப்படத்தின் மூலம் தான் இவருக்கு ஏராளமான ரசிகர்களும் கிடைத்தனர். சமீபத்தில் அசோக் செல்வனுக்கு ஜோடியாக வேழம் என்கிற திரைப்படத்தில் நடித்திருந்தார். இதுதவிர தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார் ஐஸ்வர்யா மேனன்.

44

இவ்வாறு பிசியான நடிகையாக வலம் வரும் ஐஸ்வர்யா மேனன், சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக இயங்கி வருகிறார். குறிப்பாக இன்ஸ்டாகிராமில் அவரை 28 லட்சத்துக்கும் அதிகமானோர் பின் தொடர்கின்றனர். அவர்களை கவரும் விதமாக விதவிதமாக போடோஷூட் நடத்துவதை வழக்கமாக வைத்துள்ளார் ஐஸ்வர்யா. அந்த வகையில் தற்போது ஜிகுஜிகுவென மின்னும் உடையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்தபடி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் படியுங்கள்... ஐ.என்.எஸ். விக்ராந்த் போர்க்கப்பலை காண வருகை தந்த நடிகர் மோகன்லால்...!

click me!

Recommended Stories