பிகினியை திறந்து காட்டுமாறு கேட்ட நெட்டிசனுக்கு செருப்படி பதில் கொடுத்த ‘குக் வித் கோமாளி’ பிரபலம்

Published : Aug 08, 2022, 08:35 AM IST

குக் வித் கோமாளி பிரபலம் ஒருவர் ரசிகர்களுடன் கலந்துரையாடிய போது நெட்டிசன் ஒருவர் கேட்ட மோசமான கேள்விக்கு செருப்படி பதில் கொடுத்துள்ளார்.

PREV
15
பிகினியை திறந்து காட்டுமாறு கேட்ட நெட்டிசனுக்கு செருப்படி பதில் கொடுத்த ‘குக் வித் கோமாளி’ பிரபலம்

விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேமஸ் ஆனதற்கு முக்கிய காரணம் அதில் உள்ள கோமாளிகள் தான். அந்நிகழ்ச்சியில் கோமாளியாக கலக்கிய புகழ், இன்று தமிழ் சினிமாவில் பிசியான நடிகராக வலம் வருகிறார். அவர் கைவசம் டஜன் கணக்கிலான படங்கள் உள்ளன. அதில் ஒரு சில படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார்.

25

அதேபோல் இதர கோமாளிகளான பாலா, சுனிதா, சிவாங்கி, மணிமேகலை ஆகியோரும் சின்னத்திரையில் பிசியாக உள்ளனர். இதில் சுனிதா, விஜய் டிவியில் டான்சராக அறிமுகமாகி, பல்வேறு நடன நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வெற்றிபெற்று, பின்னர் தான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக நுழைந்தார்.

இதையும் படியுங்கள்... கர்ப்பமான மகள்... மீண்டும் தாத்தா ஆகிறார் ரஜினிகாந்த் - உற்சாகத்தில் சூப்பர்ஸ்டார் குடும்பம்

35

வட மாநிலத்தை சேர்ந்த இவர், குழந்தை போல் கொஞ்சும் தமிழில் பேசுவது ரசிகர்களை மிகவும் கவர்ந்ததால், குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் கடந்த 3 சீசன்களாக முக்கியமான கோமாளியாக வலம் வருகிறார் சுனிதா. சமூக வலைதளங்களிலும் இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இன்ஸ்டாகிராமில் இவரை 14 லட்சத்துக்கும் அதிகமானோர் பின்தொடர்கின்றனர்.

45

இதனால் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் சுனிதா, அவ்வப்போது ரசிகர்களுடன் கலந்துரையாடுவதையும் வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில், அவர் சமீபத்தில் கலந்துரையாடியபோது நெட்டிசன் ஒருவர், “பிகினியை திறந்து காட்டுமாறு” கேள்வி கேட்டார். இதனால் கடுப்பான சுனிதா அந்த நபரை விளாசியுள்ளார்.

55

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இதுபோன்று அவதூறாக பேசுபவர்களை பொதுவெளியில் அம்பலப்படுத்துங்கள் எனக்கூறி அந்த நபரின் பெயரை ஸ்கிரீன் ஷாட் எடுத்து போட்டுள்ளார். இதையடுத்து அந்த நபரை சுனிதாவின் ரசிகர்கள் திட்டித்தீர்த்து வருகின்றனர். 

இதையும் படியுங்கள்... உணவு டெலிவரி பாயாக தனுஷ்...வெளியானது திருச்சிற்றம்பலம் ட்ரைலர் !

Read more Photos on
click me!

Recommended Stories