கர்ப்பமான மகள்... மீண்டும் தாத்தா ஆகிறார் ரஜினிகாந்த் - உற்சாகத்தில் சூப்பர்ஸ்டார் குடும்பம்

Published : Aug 08, 2022, 07:38 AM ISTUpdated : Aug 08, 2022, 12:58 PM IST

நடிகர் ரஜினிகாந்துக்கு ஏற்கனவே லிங்கா, யாத்ரா, வேத் என மூன்று பேரன்கள் உள்ள நிலையில், விரைவில் அவர் மீண்டும் தாத்தா ஆக உள்ளாராம்.

PREV
15
கர்ப்பமான மகள்... மீண்டும் தாத்தா ஆகிறார் ரஜினிகாந்த் - உற்சாகத்தில் சூப்பர்ஸ்டார் குடும்பம்

நடிகர் ரஜினிகாந்த், தமிழ் சினிமாவின் அடையாளமாக திகழ்ந்து வருகிறார். இவருக்கு ஐஸ்வர்யா, சவுந்தர்யா என இரண்டு மகள்கள் உள்ளனர். இவர்கள் இருவருமே சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி தங்களது திறமையை நிரூபித்து உள்ளனர். ஐஸ்வர்யா 3 மற்றும் வை ராஜா வை போன்ற படங்களை இயக்கி உள்ளார். அதேபோல் செளந்தர்யா கோச்சடையான் மற்றும் வேலையில்லா பட்டதாரி 2 ஆகிய படங்களை டைரக்ட் செய்துள்ளார்.

25

இவர்கள் இருவருக்குமே திருமண வாழ்க்கை சக்சஸ்புல்லாக அமையவில்லை. ஏனெனில் இருவருமே விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். ஐஸ்வர்யா கடந்த 2004-ம் ஆண்டு நடிகர் தனுஷை திருமணம் செய்துகொண்டார், செளந்தர்யா கடந்த 2010-ம் ஆண்டு அஸ்வின் என்கிற தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டார். ஐஸ்வர்யாவுக்கு லிங்கா, யாத்ரா என இரண்டு ஆண் பிள்ளைகளும், செளந்தர்யாவுக்கு வேத் என்ற மகனும் உள்ளனர்.

35

இவர்களில் முதலில் விவாகரத்து செய்தது செளந்தர்யா தான். அஸ்வின் உடன் ஏற்பட்ட கருத்துவேற்பாடு காரணமாக அவரை விவாகரத்து செய்த அவர், கடந்த 2019-ம் ஆண்டு விசாகன் என்பவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். இதன்பின் ஐஸ்வர்யா இந்த ஆண்டு தொடக்கத்தில் தனுஷை பிரிவதாக அறிவித்து அதிர்ச்சி கொடுத்தார்.

இதையும் படியுங்கள்... பிகினியை திறந்து காட்டுமாறு கேட்ட நெட்டிசனுக்கு செருப்படி பதில் கொடுத்த ‘குக் வித் கோமாளி’ பிரபலம்

45

ஐஸ்வர்யாவின் முடிவால் மிகுந்த மன வருத்ததில் இருந்த ரஜினிக்கு ஆறுதல் தரும் விதமாக குட் நியூஸ் ஒன்றை சொல்லி உள்ளார் செளந்தர்யா. அது என்னவென்றால் அவர் மீண்டும் கர்ப்பமாகி உள்ளாராம். இவருக்கு சமீபத்தில் வளைகாப்பு நிகழ்ச்சியும் நடத்தப்பட்டு உள்ளது. நெருங்கிய உறவினர்கள் மட்டும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டதாக கூறப்படுகிறது.

55

அக்டோபர் மாதம் குழந்தை பிறக்க வாய்ப்பு இருப்பதாக டாக்டர்கள் தேதி கொடுத்துள்ளார்களாம். செளந்தர்யாவுக்கு ஏற்கனவே வேத் என்கிற மகன் இருந்தாலும், விசாகனுடன் திருமணமான பின் அவருக்கு பிறக்க உள்ள முதல் குழந்தை என்பதால் ரஜினி குடும்பமே மிகுந்த உற்சாகத்தில் உள்ளதாம். இதை அறிந்த ரஜினி ரசிகர்கள் செளந்தர்யாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... ஆன்லைனில் இறைச்சி விற்பனை செய்யும் பிரபல நிறுவனத்தின் பிராண்ட் தூதுவராக நயன்தாரா நியமனம்

Read more Photos on
click me!

Recommended Stories