தென்னிந்திய திரையுலகில் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வரும் நயன்தாரா, நடிப்பை தாண்டி பல தொழில்களையும் செய்து வருகிறார். சில நிறுவனங்களில் பங்குதாரராகவும் அவர் இருந்து வருகிறார். குறிப்பாக விக்னேஷ் சிவன் உடன் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்கிற தயாரிப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி வரும் நயன்தாரா, அதன்மூலம், பல்வேறு இளம் இயக்குனர்களுக்கு வாய்ப்பு அளித்து வருகிறார்.