கோலிவுட்டில் அறிமுகமானபோது பல்வேறு விமர்சனங்களை சந்தித்து இன்று முன்னணி நடிகர்களாக உயர்ந்து நிற்பவர்கள் ஏராளம். உதாரணத்துக்கு விஜய், தனுஷ், சூர்யா போன்ற நடிகர்கள் சினிமாவில் அறிமுகமானபோது, இவர்களெல்லாம் ஏன் நடிக்க வருகிறார்கள், இந்த மூஞ்சியெல்லார் யார் பார்ப்பது என கிண்டல் செய்தனர், ஆனால் அவர்கள் அதனை கண்டு துவண்டுவிடாமல் தங்களது விடாமுயற்சியால் இன்று வெற்றிகரமான நாயகர்களாக உயர்ந்து நிற்கின்றனர்.