தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் சினேகா, பிரபல நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக தன்னுடைய குடும்பத்தை கவனித்து வருகிறார்.
சமீபத்தில் கூட, தன்னுடைய தந்தை பிறந்தநாளை, ஆதரவற்றோர் இல்லத்தில் உள்ள குழந்தைகளுடன் மிகவும் சிறப்பாக கொண்டாடி, தந்தைக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருந்தார் சினேகா.
இந்நிலையில் ஒவ்வொரு ஆண்டும், வரலட்சுமி நோம்பு எடுப்பதை வழக்கமாக வைத்துள்ள சினேகா இந்த ஆண்டு, சில பிரபலங்களும் சினேகா வீட்டில் நடந்த வரலட்சுமி பூஜையில் கலந்த கொண்டுள்ளனர்.
இதுகுறித்த சில புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாக அது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. நடிகை சினேகா தன்னுடைய மகள் பிறந்ததற்கு பின்னர்... நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் ஷாட் பூட் 3 படத்தின் மூலம் ரீ- என்ட்ரி கொடுக்க உள்ளார் என்பது குறிப்பிடதக்கது.