அப்பாவின் பிறந்தநாளுக்கு... சினேகா கொடுத்த எதிர்பாராத சர்ப்ரைஸ்! மனம் நெகிழ்ந்த தந்தை!

First Published | Jul 29, 2022, 9:45 PM IST

நடிகை சினேகா தாண்டிய தந்தையின் பிறந்தநாளுக்கு, அவர் எதிர்பார்த்த சர்பிரைஸ் கொடுத்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
 

நடிகை சினேகா தாண்டிய தந்தையின் பிறந்தநாளுக்கு, அவர் எதிர்பார்த்த சர்பிரைஸ் கொடுத்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
 

தமிழ் சினிமாவில் புன்னகை இளவரசி என ரசிகர்களின் மனதில் நீங்காத இடம்பிடித்தவர் நடிகை சினேகா. சினிமாவில் பிசியாக நடித்து வந்த சமயத்தில், புகழின் உச்சியில் இருந்துவந்த காலகட்டத்திலேயே நடிகர் பிரசன்னாவை காதல் திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆனார்.
 

மேலும் செய்திகள்: “உண்மையிலேயே நடிகர் அஜித் ஒரு நைஸ் ஜென்டில்மேன்” - காவல்துறை துணை ஆணையர் ஸ்ரீதேவி ஓபன் டாக்!
 

Tap to resize

தற்போது அன்பான இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக மட்டும் அல்லாமல் தன்னை தேடி வரும், தரமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து அசத்தி வருகிறார்.
 

இந்தநிலையில் இன்று சினேகாவின் தந்தை ராஜாராமுக்கு 70வது பிறந்தநாளுக்கு அவர் எதிர்பாராத விதமாக சர்ப்ரைஸ் தரவேண்டும் என விரும்பிய சினேகா, சென்னை ரெட்ஹில்ஸில் உள்ள ஷெல்ட்டர் ஹோமுக்கு தனது தந்தையை அழைத்து சென்ற சினேகா, அங்கிருந்த சிறப்பு குழந்தைகளுடன் சேர்ந்து தந்தையின் பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். இதை எதிர்பாராத சினேகாவின் தந்தை ராஜாராம் இன்ப அதிர்ச்சிக்கு ஆளானார்.

மேலும் செய்திகள்: துளியும் மேக்கப் இல்லாமல்... சாதாரண புடவையில் த்ரிஷா! வேற லெவல் அழகில் வெளியான ரீசென்ட் போட்டோஸ்!
 

இந்த நிகழ்வின்போது அந்த இல்லத்தில் இருந்த குழந்தைகளின் வாழ்த்துக்களுடன் கேக்கை வெட்டி தனது பிறந்தநாளை கொண்டாடினார் சினேகாவின் தந்தை ராஜாராம். மேலும் அதைத்தொடர்ந்து அங்கிருந்தவர்களுக்கு மத்திய உணவு வழங்கவும் சினேகா ஏற்பாடு செய்திருந்த நிலையில், பிரியாணி... ஸ்வீட் போன்றவை வழங்கப்பட்டது.
 

தாத்தாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் சினேகாவின் மகன் விஹானும் மகள் ஆத்யந்தாவும் கலந்துகொண்டனர். இவர்கள் இருவரும் அங்கிருந்த குழந்தைகளுக்கு தங்களது கைகளால் உணவு பரிமாறியதுடன், அவர்களுக்கு பரிசாக நோட்டு புத்தகங்களும் வழங்கியுள்ளனர். தற்போது இதுகுறித்த புகைப்படங்கள் சில சமூக வலைத்தளத்தில் வெளியாகி அனைவரது வாழ்த்துக்களையும் பெற்று வருகிறது.

மேலும் செய்திகள்: ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட் போட்ட வெள்ளை தாமரையாய்... ட்ரான்ஸ்பரென்ட் சேலையில் கிளாமர் காட்டும் நிதி அகர்வால்!
 

Latest Videos

click me!