மேலும் நடிகர் அஜித் தன்னை காண திருச்சி ரைபிள் கிளப் வாசலில், ஆயிரத்திற்கும் மேல் கூடிய ரசிகர்களை ஏமாற்ற மனம் இன்றி, ரைபிள் கிளப் கட்டிடத்தின் மாடிக்கு சென்று அங்கிருந்து தன்னை காண கூடியிருந்த ரசிகர் கூட்டத்தைப் பார்த்து கையசைத்ததோடு மட்டுமின்றி தம்ப்ஸ் அப் செய்து கைகூப்பி நன்றியும் தெரிவித்தார். இதுகுறித்த வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.