குழந்தை பருவத்தில் பாலியல் தொல்லை.. 2 முறை தற்கொலை முயற்சி.! காதல் பட நடிகை சரண்யாவின் வேதனை நிறைந்த மறுபக்கம்

First Published | Jul 5, 2023, 10:35 PM IST

நடிகை சரண்யா நாக், தன்னுடைய வாழ்க்கையில் நடந்த பாலியல் தொல்லை மற்றும் தற்கொலை முயற்சி பற்றி பகிர்ந்து கொண்டுள்ள தகவல், ரசிகர்களை உச்ச கட்ட அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
 

தமிழில், குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி... பல படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த சரண்யா நாக், இயக்குனர் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியான, 'காதல்' படத்தில் சந்தியா நடிக்க இருந்த கதாபாத்திரத்தில், முதலில் நடிக்க தேர்வானவர். ஒரு சில காரணங்களால் சந்தியா ஹீரோயின் ஆக மாற, சரண்யா நாக் அவருக்கு தோழியாக நடித்திருந்தார். எனினும் இவருடைய கதாபாத்திரமும் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றது.

இதை தொடர்ந்து, சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி, துள்ளுற வயசு, 10th கிளாஸ், பேராண்மை, மழைக்காலம், ரெட்ட வாலு, ஈரவேலி உள்ளிட்ட 20திற்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். தமிழை தாண்டி தெலுங்கு மொழி படங்கள் சில வற்றில் நடித்த போதும், இவரால் திரையுலகில் நிலைக்க முடியவில்லை. இவர் நடித்த படங்கள் அடுத்தடுத்து தோல்வியை சந்தித்தது. எனவே திரை உலகில் இருந்து விலகிய சரண்யா  நாக்... கடந்த சில வருடங்களாக  எங்கிருக்கிறார் என தேடும் நிலை ஏற்பட்டது.

'மாமன்னனுக்காக' வடிவேலுவுக்கு தேசிய விருது கொடுப்பதே சிறந்த கெளரவமாக அமையும்! நயன் கணவர் விக்கி புகழாரம்!

Tap to resize

திரைப்படங்களில் நடிக்காவிட்டாலும், சமூக வலைதளத்தில் படு ஆக்டிவாக இருந்து வரும் சரண்யா நாக் தன்னுடைய புகைப்படங்கள் மற்றும் கருத்துக்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வந்தார். குறிப்பாக கொரோனா சமயத்தில் 2020 ஆம் ஆண்டு,  இவர் நாளிதழுக்கு கொடுத்த பேட்டி அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. பார்ப்பதற்கு ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு, குண்டாக மாறி இருந்த சரண்யா,  தைராய்டு பிரச்சனை காரணமாக  மிகவும் குண்டாக மாறிவிட்டதாக தெரிவித்தார்.

இதை தொடர்ந்து,  சரண்யா நாக் சமீபத்தில் கொடுத்துள்ள பேட்டி ஒன்றில் பல அதிர்ச்சி தகவல்களை கூறி உள்ளார். தன்னுடைய வாழ்க்கையில் நடந்த பாலியல் தொந்தரவு மற்றும் தற்கொலை முயற்சி குறித்தும் பேசியுள்ளார். சரண்யா நாக் குழந்தை பருவத்தில் இருந்தே... அக்கம்  பக்கத்தில் உள்ள சிலர் மூலம் பாலியல் தொந்தரவை அனுபவித்து வந்துள்ளார். அந்த வயதில் அதை தடுக்கும் தைரியம் தனக்கு இல்லை என்றும், இது குறித்து அம்மாவிடமும் போய் சொல்ல முடியாத நிலையில் இருந்துள்ளார்.  காரணம் அவருடைய அம்மாவுக்கும் இதே போன்ற நிலை என்று கூறியுள்ளது தான் அதிர்ச்சியின் உச்சம்.

'ஜெயிலர்' படத்தில் ஐட்டம் டான்சராக மாறி... கவர்ச்சியில் வெறியேற்றும் தமன்னா! காவாலா லேட்டஸ்ட் அப்டேட்!

இதுபோன்ற பிரச்சனைகள் தனக்கு ஓரிரு நாட்கள் நடக்கவில்லை 27 வயது வரைக்கும் இது போன்ற ஆண்களை தான் நான் சந்தித்தேன்.  சிலர் என்னுடைய நிதி நிலையை பார்த்தார்களே தவிர, என்னுடைய நிலைமை பற்றி என்றுமே பார்த்ததில்லை. தன்னை பற்றியும்  தன்னுடைய தாயை பற்றியும் குறை சொல்பவர்கள், பலருக்கு எங்களுடைய வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்பது தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எனினும் என்னுடைய வாழ்க்கையில் ஏதேனும் ஒரு அதிசயம் நடக்கும் என்கிற நம்பிக்கை இருந்தது. என் நம்பிக்கைக்கு ஏற்றாப்போல் சில நண்பர்கள் எனக்கு கிடைத்தார்கள். அவர்கள் இதுபோன்ற பிரச்சனையில் இருந்து என்னை மீட்டு கொண்டு வந்தார்கள் என தெரிவித்துள்ளார்.

அதேபோல் 2020 ஆம் ஆண்டு வைதேகி என்கிற பத்திரிக்கையாளர் தன்னை தொடர்பு கொண்டு பேசியபோது, அதுவே என் வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு பிள்ளையார் சுழியாக அமைந்தது. அவரின் நபிக்கையான பேச்சுக்கு பிறகே புஷ்காரா ப்ரொடக்ஷன் என்கிற நிறுவனத்தை நான் தொடங்கினேன் என தெரிவித்துள்ளார் சரண்யா நாக்.

ரஜினி நடிக்க வருவதற்கு முன்பே இப்படி நடந்துருக்கா? சூப்பர் ஸ்டார் பற்றிய ரகசியத்தை பகிர்ந்த மாரிமுத்து!

மேலும் என் கஷ்டங்களில் இருந்து விடைபெற  இரண்டு முறை தற்கொலைக்கும் முயற்சி செய்துள்ளேன். இப்போது நினைத்தாலும் அது அசிங்கமாக இருக்கிறது, பின்னர் எதற்கு நான் சாக வேண்டுமென யோசித்து அந்த முட்டாள் தனமான முடிவை தூக்கி போட்டுவிட்டு வெளியேறினேன். வாழ்வதற்கான தைரியம் என்னிடம் இருந்தது. சாவதற்கு அதைவிட அதிக தைரியம் தேவை என நினைக்கிறேன். பல விதமான கஷ்டத்தில் சிக்கி மீண்டு வெளியே வந்திருந்தாலும், எப்போதும்  என்னுடைய சிரிப்பு மட்டும் எந்த நிலையிலும் மாறவில்லை. எனவே உங்களுடைய வாழ்க்கையிலும் இறுக்கமாக நீங்கள் உணர்ந்தால், அதை தூக்கி எரிந்து விடுங்கள் உங்களுடைய வாழ்க்கையும் சிறப்பானதாக அழகானதாக கண்டிப்பாக மாறும் என தான் கடந்து வந்த கடினமான பாதைகள் குறித்து பேசி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார் சரண்யா நாக்.

Latest Videos

click me!