இது என்ன அனிகாவுக்கு வந்த சோதனை? எக்கசக்க கவர்ச்சி காட்டியும்... தமிழில் கிடைக்காத ஹீரோயின் சான்ஸ்!

First Published | Jul 5, 2023, 8:18 PM IST

வசந்த் ரவி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ளார்.

இயக்குனர் ராம் இயக்கத்தில் கடந்த 2017ம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் "தரமணி" இந்த திரைப்படத்தின் மூலமாக கதையின் நாயகனாக அறிமுகமானவர்தான் வசந்த் ரவி. தனது முதல் திரைப்படத்திலேயே Filmfare வழங்கக்கூடிய சிறந்த அறிமுக நடிகர் விருது பெற்றவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதையும் படியுங்கள் : தம்பி ராமையா நடித்துள்ள ‘ராஜா கிளி’ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

அதன் பிறகு ராக்கி மற்றும் ASVINS உள்ளிட்ட திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார். அண்மையில் வெளியான அவருடைய ASVINS திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தில் இவர் ஒரு முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ளார்.

Tap to resize

அடுத்தடுத்து தொடர்ச்சியாக படங்களில் நடித்து வரும் வசந்த ரவி தற்போது சபரீஷ் நந்தா இயக்கும் திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இதுவும் ஒரு திரில்லர் திரைப்படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தின் பூஜை இன்று நடைபெற்றது, பூஜையில் பிரபல நடிகைகள் அனிகா மற்றும் மெஹரீன் கலந்து கொண்டனர். இந்த திரைப்படத்தில் பிரபல நடிகர் சுனில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். மேலும் இந்த படத்தின் பூஜையில் இயக்குனர் அமீர் கலந்து கொண்டு சிறப்பித்தார். கடந்த சில காலமாகவே எக்கச்சக்க கவர்ச்சியாக நடிக்கும் அனிகாவிற்கு இன்னும் தமிழில் தான் ஹீரோயின் வாய்ப்பு கிடைக்கவில்லை.

Latest Videos

click me!