இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில், கடைசியாக தளபதி விஜய் நடிப்பில் வெளியான 'பீஸ்ட்' திரைப்படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற போதிலும், விமர்சனம் ரீதியாக படு தோல்வியை சந்தித்தது. இந்த படத்திற்கு பின்னர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து 'ஜெயிலர்' படத்தை தற்போது இயக்கி முடித்துள்ளார் .
'ஜெயிலர்' படத்தின் மூலம் எப்படியும் தன்னுடைய வெற்றி படத்தை கொடுக்க வேண்டும் என்கிற கட்டாயத்தில் நெல்சன் திலீப் குமார் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆகிய இருவருமே உள்ள நிலையில், வரும் ஆகஸ்ட் மாதம் 10 ஆம் தேதி இப்படம் வெளியாக உள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன், 'ஜெயிலர்' படத்தில் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்துள்ளது. மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார், பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெரிப், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, வசந்த் ரவி, ரோபோ சங்கர், தமன்னா என பலர் நடித்துள்ளனர்.
உமாபதி இயக்கத்தில் தம்பி ராமையா நடித்துள்ள ‘ராஜா கிளி’ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!
இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். தொடர்ந்து இப்படத்தின் அப்டேட் குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்த நிலையில், சமீபத்தில் 'காவாலா' பாடல் விரைவில் வெளியாகும் என படக்குழு தெரிவித்தது. இது குறித்த புரோமோ ஒன்றையும் வெளியிட்ட நிலையில், தற்போது 'காவாலா' பாடலின் ரிலீஸ் தேதி மற்றும் புதிய போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளனர்.