உமாபதி இயக்கத்தில் தம்பி ராமையா நடித்துள்ள ‘ராஜா கிளி’ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

First Published | Jul 5, 2023, 7:16 PM IST

தம்பிராமையா மகன் உமாபதி ராமையா இயக்குனராக அறிமுகமாகியுள்ள, 'ராஜா கிளி' படத்தின் சென்சார் தகவல் தற்போது வெளியாகியுள்ளது. 
 

வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘ராஜா கிளி’. கதாநாயகனாக சமுத்திரக்கனி, கதாநாயகிகளாக சுவேடா ஷ்ரிம்ப்டன், சுபா  ஆகியோர் நடிக்கின்றனர் நடிகர் தம்பி ராமையாவின் மகனும் நடிகருமான உமாபதி ராமையா திரைக்கதையை எழுதி படத்தை இயக்கியுள்ளார்.

மேலும் நடிகர் தம்பி ராமையா இந்தப்படத்தின் கதை, வசனம், பாடல்கள் எழுதி இசையமைப்பாளராகவும் அறிமுகமாகியுள்ளதுடன் முக்கிய வேடத்திலும் நடித்துள்ளார்.  சாட்டை, அப்பா, வினோதய சித்தம் ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குநர் சமுத்திரக்கனி-தம்பி ராமையா கூட்டணியில் இந்தப்படம் உருவாகிறது. 

தனுஷ் இயக்கி - நடிக்கும் D50 படப்பிடிப்பு துவங்கியது! ரணகளமான போஸ்டருடன் வெளியான அறிவிப்பு!

Tap to resize

மேலும் முக்கிய வேடங்களில் ஆடுகளம் நரேன், சிங்கர் கிரிஷ், அருள்தாஸ், பிரவின் குமார், சுவேடா ஷ்ரிம்டன்,  சுபா, தீபா, வெற்றிக்குமரன், சுரேஷ் காமாட்சி, விஜய் டிவி ஆண்ட்ரூஸ் சேவியர், டேனியல் போப், பழ.கருப்பையா, ரேஷ்மா பசுபலேட்டி, ஐஸ்வர்யா பாஸ்கரன், சாட்டை துரைமுருகன், கொட்டாச்சி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இந்தப்படம் சமீபத்தில் தணிக்கை சான்றிதழுக்காக அனுப்பப்பட்டது. படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் படத்திற்கு  யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர்.

'மாமன்னன்' வடிவேலுவுக்கு உதயநிதி கொடுத்த இன்ப அதிர்ச்சி! வைரலாகும் போட்டோஸ்.!

படத்தின் டிரைலர், இசை வெளியீடு மற்றும் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. சுரேஷ் காமாட்சி தயாரித்திருக்கும் இந்த படத்தை, தம்பிராமையா மகன் உமாபதி இயக்கியுள்ளார். கோபிநாத் ஒளிப்பதிவில், சாய் தினேஷ் பின்னணி இசை பணிகளை கவனித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos

click me!