தமிழ் சினிமாவில் 'பொன்னூஞ்சல்' என்கிற படத்தில் முதல் முதலாக நடிக்க துவங்கியவர் தான் நடிகை சங்கீதா. ஆனால் இவர் நடித்த முதல் படமே ரிலீசாகாமல் போனது.
210
பின்னர் மலையாளம் மற்றும் கன்னட பட வாய்ப்புகள் கிடைக்கவே... அந்த மொழிகளில் கவனம் செலுத்த துவங்கினார். அந்த வகையில் இவர் நடித்த, மலையாளம் மற்றும் கன்னட படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
பின்னர் தமிழ் இயக்குனர்களின் கவனங்களை பெற்ற இவர், சூர்யா நடித்த 'காதலே நிம்மதி', கார்த்தி நடித்த 'உதவிக்கு வரலாமா', போன்ற படங்களில் நடித்தார். ஆனால் ஏனோ இவரால் தனி ஹீரோயினாக தமிழ் சினிமாவில் நிலைக்க முடியாமல் போனது.
410
தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் மட்டுமே அதிகம் கவனம் செலுத்தி இவருக்கு தமிழில் மிகப்பெரிய திருப்பு முனையை ஏற்படுத்தியது என்றால் அது 2003 ஆம் ஆண்டு, இயக்குனர் பாலா இயக்கத்தில் வெளியான 'பிதாமகன்' திரைப்படம் தான்.
510
இந்த படத்திற்கு பின்னர் அடுத்தடுத்து பல தமிழ் படங்களில் நடிக்க துவங்கினார். குறிப்பாக இவர் நடிப்பில் வெளியான, உயிர், தனம், மன்மதன் அம்பு போன்ற படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
கடந்த 2009 ஆம் ஆண்டு, நடிகராக ஆசைப்பட்டு பின்னர்... பாடகராக ஜொலித்த க்ரிஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர்களுக்கு, ஷிவியா என்கிற மகள் ஒருவரும் உள்ளார்.
710
அவ்வப்போது சில படங்களில் மட்டுமே தலை காட்டி வந்த சங்கீதா, தற்போது வாரிசு படத்திலும் நடித்து வருகிறார். மேலும் பல்வேறு ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வருகிறார்.
இந்நிலையில் சங்கீதாவின் 44 ஆவது பிறந்த நாள், அக்டோபர் 21 ஆம் தேதி நிலையில், இதில் திரையுலகை சேர்ந்த பல பிரபலங்கள் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர்.
910
நட்சத்திர ஹோட்டலில் நடந்த இந்த பிறந்தநாள் விழாவில் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு, குடி... கும்மாளம்... ஆட்டம் பாட்டம் என ஜமாய்த்துள்ளனர். இது குறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
இது குறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. குறிப்பாக இவருடைய பிறந்தநாள் விழாவில், சினேகா, குஷ்பு, சுஜா வருணி, அவருடைய கணவர் சிவகுமார், ராதிகா போன்ற பல பிரபலங்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.