Amala Paul Birthday Special: கவர்ச்சி குயினாக மாறி ரசிகர்களை அசரவைத்த அமலா பாலின் அட்டகாச புகைப்படங்கள்!

First Published | Oct 26, 2022, 3:25 PM IST

நடிகை அமலா பால் இன்று தன்னுடைய 31-ஆவது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், இவர் உச்சகட்ட கவர்ச்சியில் வெளியிட்ட சில புகைப்படங்களின் தொகுப்பு இதோ..
 

நடிகை அமலா பால் இன்று மிகவும் பிரமாண்டமாக தன்னுடைய 31 ஆவது பிறந்தநாளை... குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் கொண்டாடி வருகிறார். இவரது பிறந்தநாள் ஸ்பெஷலாக... இவருடைய டாப் 10 ஹாட் கிளாமர் புகைப்படங்கள் இதோ...
 

தமிழ் சினிமாவில் அறிமுகமான 'சிந்து சமவெளி' என்கிற முதல் படத்திலேயே சர்ச்சையான கதாபாத்திரத்தை தேர்வு செய்து நடித்து,பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளான அமலா பால், இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் பிரபு சாலமன் நடித்த 'மைனா' படம் இவருக்கு பல பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுத்தது. மைனா படத்திற்காக பல விருதுகளையும் பெற்று ரசிகர்கள் மனதின் நிலைத்து நின்றார் அமலா பால்.

மேலும் செய்திகள்: என்னால சிரிப்ப அடக்க முடியல.. வா ராஜா வா - பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் குறித்து விக்ரம் போட்ட டுவிட் வைரல்
 

Tap to resize

இந்த படத்தை தொடர்ந்து, தரமான கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடிக்க துவங்கிய அமலா பால்.. இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில், தெய்வ திருமகள் படத்தில் நடித்த போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. பின்னர் விஜய்யை வைத்து ஏ.எல்.விஜய் இயக்கிய 'தலைவா' படத்தில் அமலா பாலையே ஹீரோயினாக நடிக்க வைத்தார். இதன் மூலம் இவர்களுடைய காதல் மேலும் வலு பெற்று, திருமணம் வரை சென்றது. இரு தரப்பு பெற்றோர் சம்மதத்துடன் இவர்களுடைய திருமணம் இந்து மற்றும் கிருஸ்தவ முறைப்படி திருமணம் நடந்தது.
 

திருமணத்திற்கு பின்னர், திரையுலகிய விட்டு விலகிய அமலா பால், பசங்க 2, அம்மா கணக்கு, வேலையில்லா பட்டதாரி போன்ற படங்களில் நடித்தார். திருமணத்திற்கு பிறகு இவர் நடித்த படங்கள் அடுத்தடுத்து ஹிட்டாகவே ஒரு நிலையில் அடுத்தடுத்த படங்களில் நடிக்க இவருக்கு அனுமதி மறுக்க பட்டதாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்: Divyabharathi: ஜிமிக்கி கம்மலுடன்... பாவாடை தாவணியில் பளீச் அழகை காட்டி ரசிகர்களை பாடாய் படுத்தும் திவ்யபாரதி!
 

ஒரு நிலையில் இயக்குனர் ஏ.எல்.விஜய்யிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிவதாக அறிவித்தார் அமலா. அதன் பின்னர் கவர்ச்சிக்கு தடை போடாமல், மிகவும் போலடான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிக்க துவங்கினார்.

அந்த வங்கியில் அமலா பால் நடித்த 'ஆடை' படத்தில், டாய்லெட் பேப்பரை உடல் முழுவதும் சுற்றி கொண்டு நடித்தார். அதோடு மட்டும் இன்றி, அவ்வப்போது சர்ச்சை போட்டோக்களை வெளியிட்டு ட்ரெண்டிங்கில் இடம் பிடித்து வருகிறார்.

மேலும் செய்திகள்: காந்தாரா படம் பார்த்து சிலிர்த்துப் போனேன்... இந்திய சினிமாவின் மாஸ்டர் பீஸ் இது - புகழ்ந்து தள்ளிய ரஜினி
 

amala paul

குறிப்பாக ஆண் நண்பரின் மொட்டை தலையில் முத்தம் கொடுப்பது, படுக்கையறை போட்டோஸ், நண்பர்களுடன் சரக்கடிப்பது என இவரது அடசிட்டி அளவுக்கு அதிகமாக உள்ளது.

சமீபத்தில் கூட, சிக்கந்தர் சிங் என்பவர் அமலா பால் தன்னை இரண்டவது திருமணம் செய்து கொண்டதற்கான ஆதாரங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். 

மேலும் செய்திகள்: விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நயன்தாரா நடித்த ‘கனெக்ட்’ ரிலீசுக்கு ரெடி... போஸ்டருடன் வந்த அப்டேட்
 

amala paul

தொடர்ந்து தமிழ் சினிமாவில் நிலைத்து நிற்க முடியாமல், சில தடுமாறல்களை சந்தித்து வரும் அமலா பால் சமீபத்தில், தன்னுடைய தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் 'Cadaver' என்கிற படத்தை தயாரித்து நடித்திருந்தார். டிஸ்னி ஹாட் ஸ்டார் தளத்தில் வெளியானது.

தற்போது ஒரு சில படங்கள் இவருடைய கைவசம் இருக்கும் நிலையில்... இன்று தன்னுடைய 31 ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவரது பிறந்தநாளை முன்னிட்டு, இன்ஸ்டாகிராம் கவர்ச்சி குயின் அமலா பாலின் டாப் 10 ஹாட் போட்டோஸ் சில இதோ...

Latest Videos

click me!