உலக நாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி அக்டோபர் 9-ஆம் தேதி மிகவும் பிரமாண்டமாக துவங்கியது. இதுவரை நடந்து முடிந்த சீசன்களை விட, தற்போது நடந்து வரும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் அடுத்தடுத்து பல பிரச்சினைகள், சண்டைகள் அரங்கேறி வருகிறது. கிட்டத்தட்ட 70 நாட்களில் போட்டியாளர்களுக்குள் வரும் சண்டையை விட இப்போது உள்ள போட்டியாளர்கள் கண்டன்ட் கொடுக்க வேண்டும் என இல்லாத பிரச்சினையை கூட உருவாக்கி விளையாடுவதாக ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் முதல் வாரம் ஓட்டுக்களின் அடிப்படையில், கடந்த வாரம் டான்ஸ் மாஸ்டர் சாந்தி வெளியேற்றப்பட்டார். மேலும் மக்கள் மத்தியில் நன்கு வரவேற்பை பெற்ற ஜிபி முத்து பிள்ளைகளை விட்டு பிரிந்திருக்க முடியாமல் பாசத்தின் காரணமாக, பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் வரும் பணம், புகழ் என எதுவும் வேண்டாம், என கூறி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி ஒரு பாசம் மிகு தந்தையாக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடி வரும் 'சத்யா' சீரியல் புகழ் ஆயிஷாவின் முன்னாள் காதலர் குறித்த புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.