பாலியல் கொடுமை; நடிகை சனம் ஷெட்டி கமிஷனர் அலுவலகத்தில் புகார்!

First Published | Aug 21, 2024, 8:59 PM IST

கடந்த ஒரே வாரத்தில் அடுத்தடுத்து நான்கு இடங்களில் பாலியல் ரீதியான கொடுமை நடந்ததாக வெளியான தகவலை தொடர்ந்து, இதற்க்கு வன்மையாக தன்னுடைய கண்டனத்தை தெரிவித்துள்ள சனம் ஷெட்டி கமிஷனர் அலுவலகத்தில் புகாரும் கொடுத்துள்ளார்.
 

Sanam Shetty

கொல்கத்தாவில், இன்னும் இரண்டு மாதத்தில் தன்னுடைய காதலரை திருமணம் செய்ய இருந்த மருத்துவர் ஒருவர் கொடுமையான முறையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவம் இந்தியாவையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த புகாரில் கைது செய்யப்பட்ட நபர்களுக்கு மிக கடுமையான தண்டனைகள் வழங்க வேண்டும் என மக்கள், அரசியல்வாதிகள், பிரபலங்கள், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.
 

Kolkata Girl Harassment:

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து.. பிரபல நடிகையும், மாடலுமான சனம் ஷெட்டி சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அவர் இதுபோல் அரங்கேறி வரும் பாலியல் ரீதியான பிரச்சனைகள் குறித்து பேசும் போது... 'இதுபோல் செய்பவர்களின் ஆண் உ**** பை  வெட்ட வேண்டும். அப்போ தான் இன்னொரு பெண்ணை தொட யோசிப்பார்வர். ஏன் இது போல் தண்டனைகள் கொடுக்க கூடாது. ஆண்கள் சிலர், பெண்களை காம பார்வையோடு தான் பார்க்கிறார்கள்.

மீனா முதல்.. ஜோதிகா வரை; கெஸ்ட் ரோலில் ஒற்றை பாடலுக்கு ஆட்டம் போட்ட நடிகைகள்!

Tap to resize

Shanam Shetty Angry Speech

இதற்கு காரணம் அவர்களின் அதிகார திமிரு. "யாரை என்ன வேண்டுமானாலும் பண்ணலாம். பண்ணிட்டு தப்பிக்க எனக்கு தெரியும் என்கிற அஹங்காரத்தில் தான் எப்படி செய்கிறார்கள் என ஆவேசமாக பேசினார்.

Krishnagiri Girl abused:

இது போன்ற பிரச்சனைகள் பற்றி சொல்லவே கஷ்டமாக இருக்கிறது.  ஒரு வாரத்தில் 4 வழக்குகள் பதிவாகி உள்ளது. சில கொல்கத்தாவில் நடந்ததற்கு ஏன் இங்கு போராட்டம் செய்கிறார்கள் என கேட்கிறார்கள். தமிழ் நாட்டில், கிருஷ்ணகிரியில் 13 பெண்ணுக்கு பாலியல் கொடுமை நடந்துள்ளது. இதை செய்தது அவர்களின் தலைமை ஆசிரியர் தான்.

அண்ணே வரார் வழி விடுங்கோ... சுடசுட வெளியான 'GOAT' சென்சார் அப்டேட்!
 

4 Complaints in 5 days:

அதே போல் பெங்களூரில் லிப்ட் கேட்டு சென்ற பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளனர். தானேவில், பள்ளியில் வேலை செய்த இருவர்... பள்ளி குழந்தைகள் இருவரை பாத்ரூமில் வைத்து வன்கொடுமை செய்துளளனர் என வேதனையோடு கூறியுள்ளார். 
 

Latest Videos

click me!