அரியவகை நோய் பாதிப்பு... நடிகை சமந்தா மருத்துவமனையில் அனுமதி

Published : Oct 29, 2022, 04:12 PM IST

நடிகை சமந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் புகைப்படத்தை பதிவிட்டு, தனக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு பற்றியும் விவரித்துள்ளார். 

PREV
14
அரியவகை நோய் பாதிப்பு... நடிகை சமந்தா மருத்துவமனையில் அனுமதி

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் தற்போது தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழி படங்களில் நடித்து வருகிறார். நடிகை சமந்தா கைவசம், தற்போது யசோதா, சகுந்தலம், குஷி, அரேஞ்மெண்ட்ஸ் ஆஃப் லவ் என பட வாய்ப்புகள் குவிந்து கிடக்கின்றன. இதுதவிர இந்தியில் வெப் தொடர் ஒன்றிலும் நடிக்க கமிட் ஆகியுள்ளார். 

24

மேற்கண்ட படங்களில் யசோதா திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் பின்னணி பணிகள் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. இப்படம் வருகிற நவம்பர் மாதம் 11-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. ஹரி மற்றும் ஹரீஷ் ஆகியோர் இணைந்து இயக்கியுள்ள இப்படத்தில் நடிகை சமந்தா வாடகைத் தாயாக நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரைலரும் யூடியூபில் டிரெண்டாகி வருகிறது.

இதையும் படியுங்கள்... சமந்தாவுக்கு ஏற்பட்ட தீவிர உடல்நல பிரச்சனை..! சாகுந்தலம் மற்றும் யசோதா படங்களுக்கு வந்த சோதனை?

34

எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை சமந்தா, கடந்த சில மாதங்களாக அதிலிருந்து விலகியே இருந்தார். இதற்கான காரணத்தை அவர் வெளியிடாததால், அவருக்கு தோல் சம்பந்தப்பட்ட அரியவகை நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் தான் சமூக வலைதளத்தில் புகைப்படங்களை பதிவிடாமல் இருந்து வருகிறார் என்றும் கூறப்பட்டது.

44

இந்நிலையில், அதனை உறுதிப்படுத்தும் வகையில் தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் புகைப்படத்தை பதிவிட்டு, தனக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு பற்றியும் விவரித்துள்ளார். அதன்படி தான் myositis என்கிற அரியவகை நோயால் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், இதற்காக சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறி உள்ளார். விரைவில் இதிலிருந்து நலம்பெற்று திரும்பி வருவேன் எனவும் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் அவர் நலம்பெற வேண்டி பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... கர்ப்பிணியாக சமந்தா... வயிற்றில் குழந்தையுடன் ஆக்‌ஷன் ஹீரோயினாக அதகளம் செய்யும் நாயகி - வைரலாகும் யசோதா டீசர்

Read more Photos on
click me!

Recommended Stories