சூப்பர் ஸ்டாரிடம் பிறந்த நாள் வாழ்த்து பெற்ற லாரன்ஸ்..போட்டோவுடன் புதிய திட்டம் குறித்த அறிவிப்பு

First Published | Oct 29, 2022, 4:03 PM IST

பல இடங்களுக்கு நேரில் சென்று உணவு விநியோகம் செய்வேன் எனக்கு உங்கள் ஆசிகள் வேண்டும் என குறிப்பிட்டுள்ளார் ராகவா

தமிழ் திரையுலகில் தனது தனித்திறமையால் வென்றவர் ராகவா லாரன்ஸ். நடன இயக்குனராக அறிமுகமான இவர் தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். இதில் இவருக்கு ஹாரர் மூவிஸ் மிகவும் கை கொடுத்தது என்றே சொல்லலாம். அந்த படங்கள் மூலம் இவர் இயக்குனராகவும் பரிமாணித்தார்.

முனி, காஞ்சனா 1, 2, 3 என தொடர்ந்து இவர் எடுத்த ஹாரன் மூவிகள் அனைத்துமே ரசிகர்களை வெகுவாகவே கவர்ந்தது. பேய் படங்களில் கருத்துக்கள் பொதிந்து இருப்பதோ இவருக்கு தனி சிறப்பை கொடுத்தது. அதோடு காஞ்சனா படத்தை ஹிந்தியில் இயற்றினார் ராகவா லாரன்ஸ்.

மேலும் செய்திகளுக்கு... chandra lakshman : 40 வயதில் தாயான சீரியல் நடிகை..குவியும் வாழ்த்துக்கள்

Tap to resize

இவர் நடிப்பில் தற்போது ருத்ரன் மற்றும் சந்திரமுகி 2 படங்கள் உருவாகி வருகிறது. ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான சந்திரமுகி படம் அன்றைய ரசிகர்களை வெகுவாகவே கவர்ந்தது. இந்த படத்தில் நயன்தாரா ஜோதிகா முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். வடிவேல் - ரஜினிகாந்தின் காமெடி ரசிகர்களை வெகுவாகவே ஈர்த்திருந்தது.

chandramukhi 2 starts in mysuru raghava lawrence

தற்போது பல ஆண்டுகள் கழித்து இதன் இரண்டாம் பாகத்தை உருவாக்கி வருகிறார் பி. வாசு. இந்த படத்தில் நாயகனாக ராகவா லாரன்ஸும், இவருடன் ராதிகா சரத்குமார், வடிவேலும் இணைந்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. முன்னதாக ரஜினியை  சந்தித்து ஆசி பெற்ற புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார் ராகவா லாரன்ஸ்.

இதைத்தொடர் படத்திற்கான தன்னை உருவாக்கிக் கொள்ளும் புகைப்படங்களையும் வெளியிட்டதோடு இதுவரை தனக்கு உதவியாக நின்று மக்களுக்கு நன்கொடை அளித்த அனைவருக்கும் நன்றி இனி என் சம்பளத்தில் நான் பார்த்துக்கொள்கிறேன் என உருக்கமான பதிவையும் வெளியிட்டு இருந்தார்.

Raghava Lawrence

இன்று தனது 46வது பிறந்தநாளை கொண்டாடும் அவர் ரஜினிகாந்தை சந்தித்து ஆசி பெற்றுள்ளார். அது குறித்தான புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டதுடன் ஒரு புதிய திட்டத்தையும் அறிவித்துள்ளார். முன்னதாக தான் உதவும் யாரும் தன் கால்களில் விழக்கூடாது நான் தான் என்னிடம் உதவி பெறுபவர்களின் கால்களில் விழுவேன் என கூறியிருந்த ராகவா லாரன்ஸ் தற்போது இந்த ஆண்டு நான் பசியின் மதிப்பை அறிந்தேன். அன்னதானம் செய்ய திட்டமிட்டுள்ளேன். பல இடங்களுக்கு நேரில் சென்று உணவு விநியோகம் செய்வேன் எனக்கு உங்கள் ஆசிகள் வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

Latest Videos

click me!