தமிழ், தெலுங்கு போன்ற தென்னிந்திய மொழிகளில் பிரபலமாக இருக்கும், நடிகை சமந்தா... ஏற்கனவே தி ஃபேமிலி மேன் 2 வெப் சீரிஸ் மூலம் பாலிவுட் திரையுலகில் நுழைந்த நிலையில், இதை தொடர்ந்து ஹாலிவுட் வெப் தொடரான சிட்டாடல், இந்திய உருவாக்கத்தில் நடித்துள்ளார்.
ஏப்ரல் 28ஆம் தேதி முதல் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில், இந்த இணையத் தொடரின் புதிய எபிசோடுகள் , வாரம் தோறும் வெள்ளிக்கிழமையன்று வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தொடரில் ரிச்சர்ட் மேடன், பிரியங்கா சோப்ரா ஜோனஸ் ஆகியோருடன் ஸ்டான்லி டுசி, லெஸ்லி மான்விலே, ஹோலிவுட்டிலும், சமந்தா, பாலிவுட் நடிகர் வருண் தவான் இந்திய பதிப்பிலும் நடித்துள்ளனர். உலகளவில் 240 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் சிட்டாடல் இணைய தொடர் வெளியாகிறது.
சிட்டாடல் இணைய தொடர் ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்ட கதைகளுடன் உலகம் முழுவதும் வெளியாகிறது. இந்நிலையில் நடிகை சமந்தா, ஹாலிவுட் நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் விதத்தில், டைட்டான உடையில்... பாம்பு நெக் பீஸ் மற்றும் பாம்பு பிரேஸ்லெட் அணிந்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.