நயன்தாரா தான் வேணும்..! பக்கா பிளான் போட்ட இயக்குனர்... கமலுக்கு ஜோடியாகிறாரா லேடி சூப்பர் ஸ்டார்?

Published : Apr 19, 2023, 03:15 PM IST

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை, நடிகர் கமலஹாசனுக்கு ஜோடியாக நடிக்க வைக்க தற்போது பரபரப்பாக பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.  

PREV
14
நயன்தாரா தான் வேணும்..! பக்கா பிளான் போட்ட இயக்குனர்... கமலுக்கு ஜோடியாகிறாரா லேடி சூப்பர் ஸ்டார்?

தமிழ் சினிமாவில் ஐயா, படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான நடிகை நயன்தாரா... தொடர்ந்து, 20 ஆண்டுகளுக்கு மேலாக, தமிழ், தெலுங்கு, மலையாளம், ஆகிய தென்னிந்திய மொழிகளில் தொடர்ந்து முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாகவும், கதையின் நாயகியாகவும் சில படங்களில் நடித்துள்ளார். 
 

24

குறிப்பாக தமிழில், விஜய், அஜித், ரஜினிகாந்த், சூர்யா, சிம்பு, தனுஷ், போன்ற அனைத்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து விட்டாலும், ஏனோ கமல் ஹாசனுடன் மட்டும் இதுவரை ஒரு படத்தில் கூட அவர் ஜோடியாக நடிக்கவில்லை. இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு வந்தாலும், இதுகுறித்து ஒருமுறை கூட நயந்தாரா கூறவில்லை. எனினும் கண்டிப்பாக வாய்ப்பு கிடைத்தால் நடிப்பேன் என்பது போல் சமீபத்தில் கூறியதாக சில தகவல்கள் வெளியானது.

ஒரே படம்... சம்பள விஷயத்தில் நயன், சமந்தா, ராஷ்மிகாவை பின்னால் தள்ளிய மிருணாள் தாகூர்! மிரட்டுறாங்களே..!
 

34

இந்நிலையில் பிரபல இயக்குனர் மணிரத்தினம் 'பொன்னியின் செல்வன்' படத்தை தொடர்ந்து, நடிகர் கமல் ஹாசனை வைத்து இயக்க உள்ள 234 வது திரைப்படத்தில், நயன்தாராவை கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளதாகவும், இதற்கான பேச்சுவார்த்தை பரபரப்பாக நடந்து வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்த  அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

44

மேலும் தற்போது நயன்தாரா முதல் முறையாக பாலிவுட் திரையுலகிலும் ஹீரோயினாக அறிமுகமாகி உள்ளார். இயக்குனர் அட்லீ ஷாருக்கானை வைத்து இயக்கி வரும் படத்தில், நடிகர் ஷாருக்கானுக்கு ஜோடியாக ஜவான் படத்தில் நடித்து வருகிறார். அவபோது இந்த படம் குறித்த சில அப்டேட்டுகள் வெளியாகி நயன் மற்றும் ஷாருக்கான் ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறது. அது மட்டுமின்றி இறைவன், தி டெஸ்ட், உள்ளிட்ட திரைப்படங்களிலும் நயன்தாரா நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Shamlee: அஜித் மஞ்சினிக்கு உள்ள அபார திறமை.. சர்வதேச ஓவிய கண்காட்சியில் இடம்பெற்ற ஷாம்லியின் படைப்புகள்!

Read more Photos on
click me!

Recommended Stories