தொடர்ந்து தரமான கதைககளையும் கதாபாத்திரங்களையும் தேர்வு செய்து நடித்து வரும் சாய் பல்லவி, 'கார்கி' படவிழாவில் கலந்து கொண்ட லேட்டஸ்ட் வீடியோ மற்றும் சில புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
25
சாய் பல்லவி நடிப்பில், அண்மையில் வெளியான 'கார்கி' படம் தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்று சூப்பர் ஹிட் வெற்றியை பெற்றுள்ளது.
மலர் டீச்சர் கதாபாத்திரத்தை தொடர்ந்து, இந்த படத்தில் ஆசிரியையாகவும்... தவறே செய்யாமல் மிகப்பெரிய பிரச்சனையில் சிக்கி கொள்ளும் தன்னுடைய தந்தையை, போராடி காப்பாற்றும் ஒரு மகளாக எவ்வித ஓவர் ஆகிட்டிங்கும் இல்லாமல் மிகவும் எதார்த்தமாக தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.
இவரது நடிப்புக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், தற்போது அவர் 'கார்கி' பட விழாவில் மிகவும் எளிமையாக கலந்து கொண்ட சில புகைப்படங்களும், வீடியோக்களும் வெளியாகி வைரலாகி வருகிறது.