Published : Jun 29, 2022, 11:37 AM ISTUpdated : Jun 29, 2022, 02:20 PM IST
சிகப்பு நிற சேலையும், ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட்டும் அணிந்து படு கவர்ச்சியாக போஸ் கொடுத்து நடிகை ராஷ்மிகா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.
நடிகை ராஷ்மிகா மந்தனா, கிரிக் பார்ட்டி எனும் கன்னட படம் மூலம் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகி இருந்தாலும், அவரை பாப்புலர் ஆக்கியது தெலுங்கு படங்கள் தான். தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக அவர் நடித்த கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் ஆகிய படங்களின் மூலம் தான் பேமஸ் ஆனார் ராஷ்மிகா.
25
இதையடுத்து கார்த்தி நடிப்பில் கடந்தாண்டு வெளியான சுல்தான் படம் மூலம் தமிழ் திரையுலகில் எண்ட்ரி கொடுத்த அவர், அடுத்ததாக அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா படத்தில் நடித்ததன் மூலம் பான் இந்தியா நடிகையானார். இப்படத்துக்கு பின்னர் இவருக்கு பாலிவுட்டில் பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.
தற்போது பாலிவுட்டில் இவர் கைவசம் மிஷன் மஜ்னு மற்றும் குட் பாய் ஆகிய படங்கள் உள்ளன. இதில் மிஷன் மஜ்னு படத்தில் பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்கோத்ராவுக்கு ஜோடியாக நடித்துள்ளார் ராஷ்மிகா, அதேபோல் குட் பாய் படத்தில் பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சனுடன் இணைந்து நடித்துள்ளார். இந்த இரண்டும் படங்களும் விரைவில் ரிலீசாக உள்ளன.
இதுதவிர தற்போது விஜய் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி வரும் வாரிசு படத்திலும் ஹீரோயினாக நடித்து வருகிறார் ராஷ்மிகா. இப்படத்தின் மூலம் அவர் முதன்முறையாக விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார். வாரிசு படத்தை வம்சி இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இவ்வாறு கோலிவுட், பாலிவுட், டோலிவுட் என படு பிசியாக நடித்து வரும் ராஷ்மிகா அவ்வபோது கவர்ச்சியாக போட்டோஷூட்டும் நடத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது சிகப்பு நிற சேலையும், ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட்டும் அணிந்து படு கவர்ச்சியாக போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.