மீனாவின் கெரியரில் திருப்புமுனையாக அமைந்த திருமணம் - அவரின் ரீ-எண்ட்ரியும்... வித்யாசாகரின் பங்களிப்பும்

First Published Jun 29, 2022, 10:31 AM IST

மனைவி மீனா மற்றும் மகள் நைனிகாவுக்கு பக்கபலமாக இருந்த வித்யாசாகர் நேற்று உடல்நலக்குறைவால் காலமானார். இதனால் அவரது குடும்பத்தினர் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல்வேறு முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்த மீனா, கடந்த 1991-ம் ஆண்டு கஸ்தூரி ராஜா இயக்கத்தில் வெளியான என் ராசாவின் மனசினிலே படம் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானார். இப்படத்தில் ராஜ் கிரணுக்கு ஜோடியாக அவர் நடித்தார். இதையடுத்து அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்தன.

பின்னர் ரஜினி, கமல், விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்ததன் மூலம் கோலிவுட்டின் டாப் ஹீரோயினாக வலம் வந்தார் மீனா. இவ்ர் தமிழைப்போல தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற பல்வேறு மொழி படங்களில் நடித்துள்ளார். சினிமாவில் டாப் ஹீரோயினாக வலம் வந்தபோதே திருமணம் செய்துகொண்டார்.

இதையும் படியுங்கள்... மீனாவின் கணவர் வித்யாசாகர் கொரோனாவால் உயிரிழக்கவில்லை இதுதான் காரணம் - நடிகை குஷ்பு டுவிட்

நடிகை மீனாவின் திருமணம் கடந்த 2009-ம் ஆண்டு நடைபெற்றது. இவர் பெங்களூருவை சேர்ந்த வித்யாசாகர் என்கிற தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு பின் இவர்களுக்கு நைனிகா என்கிற பெண் குழந்தையும் பிறந்தது. திருமணம் முடிந்து ஓரிரு ஆண்டுகள் சினிமாவில் நடிக்காமல் இருந்த மீனா, பின்னர் கடந்த 2013-ம் ஆண்டு வெளியான த்ரிஷ்யம் என்கிற மலையாள படம் மூலம் ரீ-எண்ட்ரி கொடுத்தார்.

இதையும் படியுங்கள்... நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகரின் பின்னணி என்ன?... அவரைப் பற்றி பலரும் அறிந்திடாத தகவல்கள்

ஜீத்து ஜோசப் இயக்கிய இப்படத்தில் மோகன் லாலுக்கு ஜோடியாக நடித்திருந்தார் மீனா. இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதும் அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவியத் தொடங்கின. இதற்கு மறுப்பு தெரிவிக்காமல் அவரை அடுத்தடுத்து படங்களில் நடிக்க ஊந்துகோளாக இருந்தது மீனாவின் கணவர் வித்யாசாகர் தான்.

இதையும் படியுங்கள்... நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் உயிரிழப்புக்கு இதுதான் காரணம்… உறவினர்கள் கொடுத்த அதிர்ச்சி தகவல்!!

மீனா மட்டுமின்றி மீனாவின் மகள் நைனிகா அட்லீ இயக்கிய தெறி படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். இப்படத்தில் நடிகர் விஜய்க்கு மகளாக நைனிகா நடித்திருந்தார். அவரை இப்படத்தில் நடிக்க வைக்க முதலில் நடிகை மீனா தயங்கினாலும், வித்யாசாகர் தான் முதலில் கிரீன் சிக்னல் கொடுத்துள்ளார். இவ்வாறு மனைவி மற்றும் மகளுக்கு பக்கபலமாக இருந்த வித்யாசாகர் நேற்று உடல்நலக்குறைவால் காலமானார். இதனால் அவரது குடும்பத்தினர் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

click me!