அதுமட்டுமின்றி அவர் தனது மகளான நைனிகாவையும் சினிமாவில் நடிக்க வைத்தார். மீனா - வித்யாசாகர் தம்பதியின் மகள் நைனிகா விஜய்யின் தெறி படம் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். அப்படத்தில் நடிகர் விஜய்க்கு மகளாக நடித்திருந்தார் நைனிகா. இவ்வாறு மனைவிக்கும், மகளுக்கும் பெரும் துணையாக இருந்த வித்யாசாகர் திடீரென மரணமடைந்திருப்பது அவர்களது குடும்பத்தினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
இதையும் படியுங்கள்... கணவர் இறப்பு குறித்து அவதூறு பரப்ப வேண்டாம்..மீனாவின் உருக்கமான பதிவு!
மீனாவின் கணவர் வித்யாசாகர் ஆந்திராவில் பிறந்தவர் ஆவார். ஆந்திராவில் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்த அவர் பெங்களூருவில் ஐடி தொழில் செய்து வந்துள்ளார். நடிகை மீனாவை திருமணம் செய்த பிறகு தான் இவர் பிரபலமானார்.