விக்ரம் வில்லனை பார்த்து அசந்த புஷ்பா இயக்குனர்..இரண்டாம் பாகத்தில் மக்கள் செல்வனை கமிட் செய்ய திட்டம்?

Published : Jun 28, 2022, 08:18 PM ISTUpdated : Jun 28, 2022, 08:22 PM IST

முன்னதாக புஷ்பா தி ரைஸில் விஜய் சேதுபதி வன அதிகாரியாக நடிக்கவிருந்ததாகவும்,ஆந்திராவில் வன அதிகாரிகள் கடத்தல்காரர்கள் என கருதி பல தமிழர்களை சுட்டுக் கொன்றனர் அந்த கதாபாத்திரத்தில் தான் நடிக்க விரும்பவில்லை என மக்கள் செல்வன் கூறியதாக தகவல் உலா வந்தன.

PREV
15
விக்ரம் வில்லனை பார்த்து அசந்த புஷ்பா இயக்குனர்..இரண்டாம் பாகத்தில் மக்கள் செல்வனை கமிட் செய்ய திட்டம்?
Pushpa: The Rise

அல்லு அர்ஜூன் ரஷ்மிக்கா மந்தனா நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் வெளியான புஷ்பா தி ரைஸ் ரசிகர்களை மிரள வைத்தது.  பாக்ஸ் ஆபிஸில் 300 கோடிக்கு மேல் வசூலித்த இந்த படம் அதன் இரண்டாம் பாகம் குறித்த தாகத்தால் ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியது.  இதில் நாயகியாக வரும் ஸ்ரீவள்ளி (ராஷ்மிகா ) பான் இந்தியா நாயகியாக தற்போது கலக்கி வருகிறார். . இந்த அதிரடித் திரைப்படத்தில்  ஃபஹத் பன்வர் சிங் ஷெகாவத் என்ற போலீஸ் அதிகாரியாக நடித்தார்.

25
Pushpa: The Rise

இதற்கிடையே புஷ்பா 2வை உருவாக்கும் பணியை துவங்க திட்டமிட்ட இயக்குனர் சுகுமார், கேஜிஎப் 2 விற்கு பிறகு தனது திட்டத்தில் பெரிய மாற்றங்களை செய்துள்ளதாக பேசப்படுகிறது. இந்த முறை ஆக்சன் வேற லெவலில் இருக்கும் என ரசிகர்கள் எதிர்ப்பார்த்து காத்துள்ளனர். முந்தைய பாகத்தில் மூன்று வில்லன்களுடன் தொடரும் போடப்பட்ட புஷ்பாவின் மேலும் ஸ்ட்ராங் வில்லன்களை சேர்க்க குழு முடிவு செய்துள்ளதாம்.

மேலும் செய்திகளுக்கு.. ராக்கெட்ரி மேக்கப்பில் மாதவனை பார்த்து அதிர்ச்சியான சூர்யா.. வாயடைத்துப் போன ​​வீடியோ இதோ

35
Pushpa: The Rise

இன்னும்  சில மாதங்களில் படப்பிடிப்புக்கு  செல்லும் என்று எதிர்பார்க்கப்படும் இதில் அல்லு அர்ஜுன் மற்றும் ஃபஹத் ஃபாசில் வரவிருக்கும் படத்தில் மோதுவார்கள் என்பது அறிந்ததே. தற்போதைய அறிக்கையின் படி தயாரிப்பாளர்கள் இப்போது விஜய் சேதுபதியை ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க பரிசீலித்து வருகின்றனராம்.

மேலும் செய்திகளுக்கு... ஹிருத்திக் ரோஷனால் எகிறிய விக்ரம் வேதா பட்ஜெட் ! வெளிநாடு தான் வேண்டுமென அடம்பிடிக்கும் நாயகன்?

45
vijay sethupathi

முன்னதாக புஷ்பா திரைஸில் விஜய் சேதுபதி வன அதிகாரியாக நடிக்கவிருந்ததாகவும்,ஆனால் ஆந்திராவில் வன அதிகாரியாக  தமிழ் நட்சத்திரம் நடிக்க தயங்கினார் என சொல்லப்பட்டது. காரணம்  அவர்கள் கடத்தல்காரர்கள் என கருதி பல தமிழர்களை சுட்டுக் கொன்றனர் ஆகையால் அந்த கதாபாத்திரத்தில் தான் நடிக்க விரும்பவில்லை என மக்கள் செல்வன் கூறியதாக தகவல் உலா வந்தன.

மேலும் செய்திகளுக்கு.. படப்பிடிப்பை முடித்த 'தலைநகரம் 2' படக்குழு !

55
vijay sethupathi

இந்நிலையில் தற்போதைய ஹிட் வில்லன் வரிசையில் உள்ள விஜய் சேதுபதியை இரண்டாம் பாகத்தில்  நடிக்க வைக்க படக்குழு முயன்று வருகிறதாம். வித்தியாசமான கேரக்டரில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளதால், நடிகர் ஒப்புக்கொள்ளும் வாய்ப்புகள் உள்ளன என சொல்லப்படுகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories