துபாயில் ஆடம்பரமான செட்கள் மூலம் உத்தரபிரதேசத்தின் அதே பாதைகளை செட் அமைக்கும் பணியில் படக்குழு ஈடுபட்டுள்ளனராம் . இதனால் பட்ஜெட் எகிறிவிட்டதாக பேசப்படுகிறது.
கடந்த 2017-ம் ஆண்டு வெளியான விக்ரம் வேதா திரைப்படம் புஷ்கர்-காயத்ரி எழுதி இயக்கியது. எஸ். சஷிகாந்த் தனது YNOT ஸ்டுடியோஸ் கீழ் இந்த படத்தை தயாரித்திருந்தார். மாதவன் , விஜய் சேதுபதி , ஷ்ரத்தா ஸ்ரீநாத் , கதிர் மற்றும் வரலட்சுமி சரத்குமார், பிரேம் , அச்யுத் குமார் , ஹரீஷ் பெராடி மற்றும் விவேக் பிரசன்னா ஆகியோர் துணை வேடங்களில் வந்திருந்தனர்.
24
vikram vedha
விமர்சன ரீதியாக பாராட்டுகளை பெற்ற விக்ரம் வேதா, 110 மில்லியன் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட பாக்ஸ் ஆபிஸில் சிறப்பாகச் செயல்பட்டு உலகளவில் ₹ 600 மில்லியன் வசூலித்தது. இந்த படம் நான்கு பிலிம்பேர் , விஜய் மற்றும் நார்வே தமிழ் திரைப்பட விழா விருதுகள் உள்ளிட்ட பல விருதுகளை தட்டி சென்றது.
விறுவிறுப்பாக நடந்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு பற்றிய புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, பழைய விக்ரம் வேதா போலவே குறைந்த பட்ஜெட்டில் படத்தை முடிக்க இயக்குனர்கள் ஒப்பந்தம் செய்திருந்த வேலையில் ரித்திக்கின் புதிய கண்டிஷன் செலவை அதிகப்படுத்தியுள்ளதாம்.
உ.பி.யின் சில பாழடைந்த பாதைகளில் படத்தைப் படமாக்க படக்குழு முடிவு செய்துள்ளதாம், ஆனால இதில் ஆர்வமில்லாத ஹிருத்திக் ரோஷன் அந்த இடத்தில் நடிக்க மறுத்து விட்டனராம். இதையடுத்து அதற்கு பதிலாக, துபாயில் ஆடம்பரமான செட்கள் மூலம் உத்தரபிரதேசத்தின் அதே பாதைகளை செட் அமைக்கும் பணியில் படக்குழு ஈடுபட்டுள்ளனராம் . இதனால் பட்ஜெட் எகிறிவிட்டதாக பேசப்படுகிறது.