BiggBoss Abhirami : பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்கு பின்னர் இன்ஸ்டாகிராமில் படு ஆக்டிவாக இயங்கி வரும் அபிராமி, சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் வாக்கெடுப்பு ஒன்றை நடத்தி உள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் பிக்பாஸ் அபிராமி. இவர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கலந்துகொண்டார். அப்போது நடிகர் முகின் ராவை காதலிப்பதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இந்நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே இவர் வெளியேற்றப்பட்டாலும். இந்நிகழ்ச்சியின் மூலம் கிடைத்த புகழ் வெளிச்சம் காரணமாக இவருக்கு பட வாய்ப்புகளும் கிடைத்தது.
அந்த வகையில் இவர் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் ஹீரோவாக நடித்திருந்த நேர்கொண்ட பார்வை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதையடுத்து ஏராளமான விளம்பர பட வாய்ப்புகளும் இவருக்கு கிடைத்தது. இதுதவிர வெப் தொடர்கள், படங்கள் என பிசியான நடிகையாக வலம் வந்தார்.
இதையடுத்து இந்த ஆண்டு தொடக்கத்தில் ஓடிடிக்காக பிரத்யேகமாக நடத்தப்பட்ட பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டார் அபிராமி. இதில் அவர் தனது முன்னாள் காதலனான நிரூப் உடன் சண்டை போட்டது. சிகரெட் பிடித்தது என ஏராளமான சர்ச்சைகளிலும் சிக்கினார்.
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்கு பின்னர் இன்ஸ்டாகிராமில் படு ஆக்டிவாக இயங்கி வரும் அபிராமி. சமீபத்தில் மூக்கில் வளையம் போட இன்ஸ்டாகிராமில் வாக்கெடுப்பு நடத்தி உள்ளார். இதில் 58 சதவீதம் பேர் போடுங்கள் என்றும், 42 சதவீதம் பேர் போட வேண்டாம் என்றும் வாக்களித்துள்ளனர். அதிக அளவிலான ரசிகர்கள் போட சொன்னதால் உடனடியாக மூக்கில் வளையம் போட்டுக்கொண்டு அதன் புகைப்படத்தையும் ஷேர் செய்துள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் சிலர் இதற்கெல்லாமா வாக்கெடுப்பு நடத்துவாங்க... என்ன கொடுமை சார் இது என கிண்டலடித்து வருகின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.