இந்த படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, யோகி பாபு, பிரியா மணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். நடிகர் விஜய் ஜவான் படத்தில் கேமியோ ரோலில் நடிக்க உள்ளதாக ரிலீஸுக்கு முன்பே பரவலாகப் பேசப்பட்டது. ஆனால், படம் வெளியான பிறகு அந்த தகவல் பொய் என்பது உறுதியானது. விஜய் அந்த படத்தில் நடிக்கவில்லை.