தன்னுடன் நடித்த தமிழ் ஹீரோவின் பெயரை மகனுக்கு சூட்டிய நடிகை பிரணீதா சுபாஷ்

First Published | Dec 27, 2024, 7:54 AM IST

Pranitha subhash Son Name : தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல்வேறு மொழிகளில் நாயகியாக நடித்துள்ள நடிகை பிரணீதா சுபாஷ் தன் மகனுக்கு பிரபல தமிழ் ஹீரோவின் பெயரை சூட்டி இருக்கிறார்.

Suriya, Pranitha

பெங்களூருவை சேர்ந்தவர் பிரணீதா சுபாஷ். இவர் கல்லூரியில் படிக்கும்போதே போர்கி என்கிற கன்னட படத்தில் நடித்தார். அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சினிமாவில் முழு கவனம் செலுத்த தொடங்கிய பிரணீதாவுக்கு அடுத்தடுத்து இரண்டு தெலுங்கு பட வாய்ப்புகள் வந்தன. அப்படத்தில் கமிட்டான கையோடு, கோலிவுட்டில் இருந்தும் பிரணீதாவுக்கு பட வாய்ப்பு வந்தது. அதை ஏற்று கடந்த 2011-ம் ஆண்டு வெளிவந்த உதயன் என்கிற படத்தின் மூலம் கோலிவுட்டில் ஹீரோயினாக எண்ட்ரி கொடுத்தார் பிரணீதா. இப்படத்தில் அருள்நிதிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

Pranitha shubash Family

பின்னர் தமிழில் இரண்டாவது படத்திலேயே முன்னணி ஹீரோவான கார்த்திக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார் பிரணீதா. ஷங்கர் தயால் இயக்கத்தில் கடந்த 2012-ம் ஆண்டு வெளிவந்த சகுனி படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்திருந்தார் பிரணீதா. அப்படத்தில் இருவருக்கும் இடையேயான கெமிஸ்ட்ரி வேறலெவலில் ஒர்க் அவுட் ஆகி இருந்தது. கார்த்திக்கு ஜோடியாக நடித்து முடித்த பிரணீதாவுக்கு அடுத்த படத்திலேயே சூர்யாவுடன் டூயட் பாட சான்ஸ் கிடைத்தது.

இதையும் படியுங்கள்...  கோவிலில் சுவாமி தரிசனம்.. சிறப்பாக முடிந்த நாக பஞ்சமி - டிவோஷனல் மோடில் சூர்யா பட நடிகை பிரணிதா சுபாஷ்!

Tap to resize

Pranitha shubash Second Baby

அந்த வகையில் கடந்த 2014-ம் ஆண்டு வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான மாஸ் திரைப்படத்தில் பிளாஷ்பேக் காட்சிகளில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார் பிரணீதா. படத்தில் சிறிது நேரமே வந்தாலும் தன்னுடைய நடிப்பால் அனைவரையும் கவர்ந்திருந்தார். அடுத்தடுத்து 2 டாப் ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்ததால் கோலிவுட்டில் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்ட பிரணீதா, கடந்த 2017-ம் ஆண்டு வெளிவந்த ‘ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும்’ மற்றும் ‘எனக்கு வாய்த்த அடிமைகள்’ ஆகிய படங்களுக்கு பின் தமிழ் சினிமா பக்கம் தலைகாட்டவே இல்லை. இதில் ‘எனக்கு வாய்த்த அடிமைகள்’ திரைப்படத்தில் ஜெய்க்கு ஜோடியாக நடித்திருந்தார் பிரணீதா.

Pranitha shubash Husband nitin

நடிகை பிரணீதாவுக்கு கடந்த 2021-ம் ஆண்டு நிதின் ராஜு என்பவருடன் திருமணம் ஆனது. திருமணத்துக்கு பின்னர் சினிமா பக்கம் தலைகாட்டாத பிரணீதாவுக்கு கடந்த 2022-ம் ஆண்டு ஒரு பெண் குழந்தை பிறந்தது. பின்னர் அடுத்த ஆண்டே மீண்டும் கர்ப்பம் ஆன பிரணீதா கடந்த செப்டம்பர் மாதம் இரண்டாவதாக ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். குழந்தையின் முகத்தை வெளியுலகத்துக்கு காட்டாமல் இருந்த பிரணீதா, தற்போது முதன்முறையாக மகனின் புகைப்படம் மற்றும் பெயரை வெளியிட்டு இருக்கிறார்.

Pranitha shubash Second Baby Name

அதன்படி நடிகை பிரணீதா சுபாஷ் தன்னுடைய மகனுக்கு தன்னுடன் நடித்த தமிழ் ஹீரோவின் பெயரையே சூட்டி இருக்கிறார். அவர் தன் மகனுக்கு ஜெய் என பெயர் சூட்டி உள்ளார். முன்னதாக எனக்கு வாய்த்த அடிமைகள் படத்தில் நடிகர் ஜெய்க்கு ஜோடியாக பிரணீதா நடித்திருந்தார். மகன், மகள் மற்றும் கணவருடன் நடிகை பிரணீதா சுபாஷ் நடத்தியுள்ள லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

இதையும் படியுங்கள்...  Pranitha Subhash : ஆடையின்றி பாத்டப்பில் ஆனந்த குளியல் போட்ட நடிகை பிரணிதா... காட்டுத்தீ போல் பரவும் போட்டோஸ்

Latest Videos

click me!