கோவிலில் சுவாமி தரிசனம்.. சிறப்பாக முடிந்த நாக பஞ்சமி - டிவோஷனல் மோடில் சூர்யா பட நடிகை பிரணிதா சுபாஷ்!
Pranita Subhash : இன்று அனுசரிக்கப்படும் நாக பஞ்சமியை சிறப்பாக கொண்டாடியதாக நடிகை பிரணிதா சுபாஷ் தெரிவித்துள்ளார்.
kollywood actress
கர்நாடகாவில் பிறந்து, கன்னட மொழி திரைப்படங்கள் மூலம் தனது கலை உலக பயணத்தை தொடங்கிய நடிகை தான் பிரணிதா சுபாஷ். கடந்த 14 ஆண்டுகளாக இவர் சினிமா துறையில் பயணித்து வருகிறார்.
pranitha photos
கன்னடம், தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் நடித்துவரும் நடிகை பிரணிதா சுபாஷ், கடந்த 2011ம் ஆண்டு தமிழில் வெளியான "உதயன்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் தனது கோலிவுட் பயணத்தை தொடங்கினார்.
Pranitha
கடந்த 2021ம் ஆண்டு நிதின் ராஜு என்பவருக்கும், பிரணிதாவுக்கும் திருமணம் நடந்து நிலையில், தற்பொழுது அவர்களுக்கு ஒரு குழந்தை இருக்கிறது. திருமணத்திற்கு பிறகும் தொடர்ச்சியாக திரைப்படங்களில் நடித்து வரும் அவர், அதிக அளவில் தெய்வ நம்பிக்கை உள்ளவர் ஆவார்.
Actress pranitha subhash
இந்த நிலையில் இன்று ஆகஸ்ட் 9ம் தேதி விமர்சையாக நாக பஞ்சமி கொண்டாடப்படும் நிலையில், கோவிலுக்கு சென்று நாக தெய்வங்களுக்கு அபிஷேகம் செய்து வணங்கி வந்துள்ளார் நடிகை பிரணிதா சுபாஷ்.
நடிகர் சூர்யாவுக்கு படப்பிடிப்பில் மண்டை உடைந்தது! வெளியான அதிர்ச்சி தகவல்!