Vijay TV Bigg Boss
விஜய் டிவியில் கடந்த அக்டோபர் மாதம் 6-ஆம் தேதி துவங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி, 80 நாட்களை எட்டியுள்ளது. மேலும் இறுதி கட்டத்தை நோக்கி நிகழ்ச்சி நகர்ந்து கொண்டிருப்பதால், இந்த வாரம் பிக்பாஸ் ரசிகர்கள் மற்றும் போட்டியாளர்கள் எதிர்பார்த்த ஃப்ளீஸ் டாஸ்க் நடந்து வருகிறது.
Bigg Boss Tamil 8 Freeze Task
பிக்பாஸ் வீட்டிற்குள் முதலாவதாக தீபக்கின் குடும்பம் வந்த நிலையில், இவர்களைத் தொடர்ந்து மஞ்சரி, ராயன், விஷால், பவித்ரா, ராணவ், சௌந்தர்யா, அன்ஷிதா, ஆகியோரின் குடும்பங்கள் வந்து சென்றனர். இன்றைய தினம் ஜெஃப்ரி, ஜாக்குலினின் பெற்றோர் வருகை தந்த போது வெளியான ப்ரோமோக்கள் வைரலானது.
Archana Ravichandran Not Enter in Bigg Boss
இதில் என்ன ஒரு ட்விஸ்ட் என்றால், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடி வரும் அருண்... கடந்த பிக்பாஸ் சீசன் 7 டைட்டில் வின்னர் அர்ச்சனா ரவிச்சந்திரனின் காதலர் என்பதால்.. அர்ச்சனா பிக்பாஸ் வீட்டின் உள்ளே வர வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. ஆனால் அர்ச்சனா வராமல் போனது தான், ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.