மிஷ்கின் இயக்கிய "முகமூடி" படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே.. இந்த படத்திற்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை என்றாலும், அவருக்கு தெலுங்கு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
இருப்பினும், பூஜா ஹெக்டே தென்னிந்திய சினிமாவில் அல்லு அர்ஜுனின் "டிஜே" மூலம் மீண்டும் ரீ எண்ட்ரி கொடுத்தார். தன்னை ஒரு முன்னணி நடிகையாக நிலைநிறுத்திய அவர், பல உச்ச நட்சத்திரங்களுடன் ஜோடி சேர்ந்தார். ஜூனியர் என்.டி.ஆர், மகேஷ் பாபு, அல்லு அர்ஜுன், பிரபாஸ், விஜய், என பல டாப் நடிகர்களுடன் இணைந்து நடித்து அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்தார்..
கடந்த ஆண்டு வெளியான பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து அனைவரையும் ஈர்த்திருப்பார். மேலும் "ஹவுஸ்ஃபுல் 4" மூலம் மீண்டும் பாலிவுட்டிலும் தடம் பதித்தார். தொடர்ந்து தெலுங்கு, ஹிந்தி படங்களில் நடிக்க கமிட்டாகி உள்ளார். பூஜா ஹெக்டே.
முன்னதாக நேற்று மும்பையை சேர்ந்த பிரபல கிரிக்கெட் வீரர் ஒருவரை பூஜா ஹெக்டே திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியானது. இதுதொடர்பாக சமூக வலைதளங்களில் பல தகவல்கள் பரவி வரும் நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக பூஜா இன்னும் அதிகாரபூர்வ அறிவிப்போ, விளக்கமோ எதுவும் தெரிவிக்கவில்லை.
இதனிடையே நடிகர் மகேஷ் பாபுவின் புதிய படத்தில் நடிக்க கமிட்டான பூஜா ஹெக்டே, தனது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அந்த படத்தில் இருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.