சிம்பு நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ரிலீசான படம் ஈஸ்வரன். சுசீந்திரன் இயக்கியிருந்த இப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானார் நடிகை நிதி அகர்வால். இதையடுத்து ஜெயம்ரவிக்கு ஜோடியாக பூமி என்கிற படத்தில் நடித்தார். இந்த இரண்டு படங்களும் ஒரேநாளில் ரிலீஸ் ஆனதால், நிதி அகர்வாலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
இந்த இரு படங்கள் மூலம் மட்டுமே நிதி அகர்வாலுக்கு தமிழ் நாட்டில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உருவானது. அவருக்கென கோவில் கட்டிய சம்பமும் அரங்கேறியது. இதைப்பார்த்து வியந்து போன நிதி அகர்வால், அந்த ரசிகர்களை நேரில் அழைத்து பாரட்டியதோடு, அவர்கள் செய்யும் மக்கள் நலப்பணிகளுக்கு நிதி உதவியும் அளித்து வருகிறார்.
நடிகை நிதி அகர்வால் தற்போது உதயநிதிக்கு ஜோடியாக கலகத்தலைவன் படத்தில் நடித்துள்ளார். மகிழ் திருமேனி இயக்கியுள்ள இப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நிதி அகர்வால் அவ்வப்போது ரசிகர்களுடன் கலந்துரையாடுவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் சமீபத்தில் கலந்துரையாடிய போது ரசிகர்கள் கேட்ட ஏராளமான கேள்விகளுக்கு பதிலளித்தார்.
அப்போது ரசிகர் ஒருவர் நீங்கள் நடிக்க வரவில்லை என்றால் என்ன தொழில் செய்திருப்பீர்கள் என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த அவர், நான் மட்டும் நடிக்க வராமல் இருந்திருந்தால், பேஷன் டிசைனிங் படித்துவிட்டு, பேஷன் பிராண்ட் ஒன்றை தொடங்கி நடத்தி இருப்பேன். என்னுடைய குடும்பத்தினர் பிசினஸ் செய்து வருவதால் நானும் கண்டிப்பாக பிசினஸ் தான் செய்திருப்பேன் என கூறியுள்ளார்.
இதையும் படியுங்கள்... நகைச்சுவை நடிகர் போண்டா மணிக்கு உதவிக்கரம் நீட்டிய தனுஷ்