நகைச்சுவை நடிகர் போண்டா மணிக்கு செயலிழந்துவிட்டதாகவும், அவர் சிகிச்சைக்கு பணமின்றி தவிப்பதாகவும் கடந்த வாரம் சக நடிகரான பெஞ்சமின் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அவருக்கு திரையுலகினர் உதவ முன்வருமாரும் வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்த வீடியோ வைரல் ஆனதை அடுத்து நடிகர் போண்டா மணிக்கு பலரும் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர்.
அதேபோல் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடிகர் விஜய் சேதுபதி ரூ.1 லட்சம் கொடுத்து உதவி இருந்தார். அந்த ஒரு லட்சம் ஒரு கோடிக்கு சமம் என நெகிழ்ச்சியுடன் பேசியிருந்த போண்டா மணி, வடிவேலு தன்னிடம் பேசியதில் தான் பாதி குணமடைந்துவிட்டதாகவும் கூறினார். அதுமட்டுமின்றி வடிவேலு தன்னால் இயன்ற உதவியை செய்வேன் என்றும் உறுதியளித்திருந்தார்.