வெந்து தணிந்தது காடு வெற்றி... சிம்புவுக்கு ரூ.1 கோடி மதிப்புள்ள சொகுசு காரை பரிசளித்த தயாரிப்பாளர்

First Published | Sep 25, 2022, 8:58 AM IST

vendhu thanindhathu kaadu : வெந்து தணிந்தது காடு படத்தின் வெற்றியால் ஹாப்பியாக உள்ள தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், நேற்று அப்படத்தின் சக்சஸ் மீட்டை படக்குழுவுடன் சென்னையில் கொண்டாடினார்.

கவுதம் மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்த வெந்து தணிந்தது காடு திரைப்படம் கடந்த செப்டம்பர் 15-ந் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆனது. வேலைக்காக மும்பை செல்லும் தமிழகத்தை சேர்ந்த இளைஞன் அங்கு எப்படி டான் ஆகிறான் என்பதே இப்படத்தின் கதை. இதில் சிம்புவுக்கு ஜோடியாக அறிமுக நடிகை சித்தி இத்னானி நடித்துள்ளார்.

வெந்து தணிந்தது காடு படத்தை வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் சார்பாக ஐசரி கணேஷ் தயாரித்திருந்தார். இப்படம் வெளியாகி பாக்ஸ் ஆபிஸிலும் வசூல் மழை பொழிந்து வருவதால் படக்குழு மிகவும் உற்சாகமடைந்துள்ளது. இப்படத்தின் வெற்றியால் ஹாப்பியாக உள்ள தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், நேற்று அப்படத்தின் சக்சஸ் மீட்டை சென்னையில் கொண்டாடினார்.

இதையும் படியுங்கள்... தஞ்சை பெரிய கோவிலின் சிறப்பம்சத்தை லிஸ்ட் போட்ட சியான்... மும்பையை மெர்சலாக்கிய விக்ரமின் மாஸ் பேச்சு

Tap to resize

அதில் இயக்குனர் கவுதம் மேனன் மற்றும் நடிகர் சிம்புவுக்கு பரிசுகளை வழங்கினார். அதன்படி கவுதம் மேனனுக்கு பைக் மிகவும் பிடிக்கும் என்பதால், அவருக்கு ரூ.2 லட்சம் மதிப்புள்ள புல்லட் ஒன்றை பரிசாக வழங்கினார். இதையெல்லாம் விட சிம்புவுக்கு அவர் கொடுத்த பரிசு தான் வேறலெவல். அவருக்கு சொகுசு கார் ஒன்றை பரிசாக அளித்துள்ளார் ஐசரி கணேஷ்.

டொயோட்டா நிறுவனத்தின் விலையுயர்ந்த சொகுசு கார் ஆன ‘Toyota vellfire’ எனும் காரை பரிசாக வழங்கி இருக்கிறார். அந்த காரின் விலை கிட்டத்தட்ட ரூ.1 கோடி இருக்கும் என சொல்லப்படுகிறது. சமீபத்தில் விக்ரம் படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதற்கு அதன் இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு கமல் ரூ.80 லட்சம் மதிப்புள்ள காரை பரிசாக வழங்கி இருந்த நிலையில், தற்போது சிம்புவுக்கு ஐசரி கணேஷ் ரூ.1 கோடி மதிப்புள்ள காரை பரிசளித்துள்ளது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படியுங்கள்... வாரிசுடன் மோத முடிவு செய்த துணிவு...பிரபல தயாரிப்பாளரின் ட்வீட்டால் பரபரப்பு

Latest Videos

click me!