அந்த கடிதத்தில் "தான் ஒருவரை மனதார விரும்பியதாகவும் அவர் தனது காதலை ஏற்றுக் கொள்ளாததால் இந்த உலகை விட்டு பிரிவதாகவும், தனது தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை என்றும் பவுலின் ஜெசிக்கா எழுதியிருந்தார். விசாரணையில் பவுலிங் ஜெசிக்காவின் கைபேசி காணாமல் போனது தெரியும் வந்தது. அந்த கைபேசி எண்ணையை ஆராய்ந்த போது அவர் இறுதியாக சிராஜுதீன் என்பவருடன் நெடுநேரம் பேசியிருந்தது தெரியவந்துள்ளது.
இதனால் விசாரணைக்காக சிராஜுதீனை போலீசார் அழைத்துள்ளனர். இது குறித்து சம்மனும் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை அவர் காவல் துறை விசாரணைக்கு வராததால் அவர் மீது சந்தேகம் எழுந்துள்ளது. எனவே இந்த தற்கொலையில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளதால் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகும் என தெரிகிறது.