ps 1
மணிரத்தினத்தின் கனவு படமான பொன்னியின் செல்வன் தற்போது திரைக்கு தயாராக இருக்கிறது. விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளங்கள் முக்கிய ரோல்களில் நடிக்க சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரபு உள்ளிட்டோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர்.
ps 1
இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றத அந்த விழாவில் உலக நாயகன் கமலஹாசன் முதல் ரஜினிகாந்த், சங்கர் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மேடையில் அவர்களது பேச்சுக்களும் வைரல் ஆகின.
ps 1
பலரும் பங்கேற்க வேண்டும் என ஆசைப்பட்ட பொன்னியின் செல்வன் தற்போது திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது. இதன் ட்ரெய்லர், பாடல்கள் அனைத்தும் பெற்ற வெற்றியை வைத்து படம் ஆயிரம் கோடி வசூலை பெறும் என தெரிகிறது.
மேலும் செய்திகளுக்கு...ஓடிடி-க்கு வரும் விக்ரமின் கோப்ரா எப்ப ரிலீஸ் தெரியுமா?
ps 1
500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் லைக்கா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தின் ப்ரோமோஷன் விழாக்கள் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. அதற்காக சமீபத்தில் படக்குழு ஒன்றாக விமானத்தில் புறப்பட்டனர்.
ps 1
அதோடு சோழ வம்ச வரலாறான இதன் இரண்டாவது பாகமும் தயாராகி உள்ளது. அதன் வெளியீட்டு தேதியும் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.