ramarajan
கிராமத்து நாயகனாய் மக்கள் மனதில் மிகப்பெரிய இடத்தை பிடித்த ராமராஜன் கடந்த 1986 ஆம் ஆண்டு வெளியான நம்ம ஊரு நல்ல ஊரு திரைப்படம் மூலம் நாயகனாக அறிமுகமானார். அதை தொடர்ந்து அவர் நடித்த பல படங்களும் வெற்றி படங்களாகவே அமைந்தது.
கங்கை அமரன்இயக்கிய கரகாட்டக்காரன் படம் 100 நாட்களுக்கு மேல் ஓடி மிகப் பெரிய பிளாக்பஸ்டர் படமாய் வெற்றியை பெற்றுக் கொடுத்தது. சில திரை அரங்குகளில் ஒரு வருடம் கூட இந்த படம் ஒட்டப்பட்டு 400 நாட்கள் ஓடியதற்கான சாதனையையும் பெற்றது.
ramarajan
பின்னர் எங்க ஊரு பாட்டுக்காரன், செண்பகமே செண்பகமே, ஊர்காவல்காரன், பாட்டுக்கு நான் அடிமை என அப்போதைய உச்ச நட்சத்திரங்களாக இருந்த ரஜினிகாந்த் கமலஹாசனை காட்டிலும் மிகப்பெரிய பேரையும் புகழையும் பெற்றிருந்தவர் ராமராஜன்.
மேலும் செய்திகளுக்கு...ஓடிடி-க்கு வரும் விக்ரமின் கோப்ரா எப்ப ரிலீஸ் தெரியுமா?
44 படங்களில் தொடர்ந்து தனி ஹீரோவாக நடித்துள்ள ராமராஜன் தற்பொழுது 10 வருடங்கள் கழித்து மீண்டும் ரீ. என்ட்ரி கொடுத்துள்ளார். அதன்படி தற்போது சாமானியன் என்னும் படத்தில் நடித்துள்ளார். அந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவின்போது 50 படங்கள் வரை நாயகனாக நடிக்கும் ஒரே நடிகன் நானாகத்தான் இருப்பேன். இதுவரை யாரும் இதுபோன்ற புகழைப் பெறவில்லை. நூறு கோடி ரூபாய் கொடுத்தாலும் தரங்கெட்ட கதைகள் நடிக்க மாட்டேன் என வீரியமாக பேசியிருந்தார் ராமராஜன்.
ramarajan
இந்நிலையில் ராமராஜன் குறித்த தகவலை எழுத்தாளர் மற்றும் பத்திரிகையாளருமான சூறா தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். அதாவது ராமராஜனின் முதல் படமான நம்ம ஊரு நல்ல ஊரு என்கிற படத்தை இயக்கிய அழகப்பன் 'என் வழி தனி வழி என்ற திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். ஆனால் அந்த படம் தோல்வியை சந்தித்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு...நகுல் என்னிடம் பேசாததற்கு ரஜினி மகள்களும் ஒரு காரணம்... புது குண்டை தூக்கிபோட்ட தேவயானியின் கணவர் ராஜகுமாரன்
அந்த படத்தின் தயாரிப்பாளருமான அழகப்பனுக்கு 10 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டு இருக்கிறது. அந்த காலகட்டத்தில் அந்த பணம் மிகப்பெரிய தொகையாகும் அதை அடுத்தது சேலம் விநியோகஸ்தராக இருந்த எம் எஸ் பிலிம்ஸ் பரமசிவம் அவர்கள் ராமராஜனிடம் இதைக் கூறி கால்ஷீட் கேட்க கூறியுள்ளார். இதையடுத்து ராமராஜனை சந்தித்த அழகப்பன் தன்னுடைய சூழ்நிலையை எடுத்துக் கூற உடனடியாக கால் ஷீட் கொடுத்து உதவியுள்ளார் நடிகர் ராமராஜன்.
அதன்படி தான் உருவாகியுள்ளது "தங்கமான ராசா" இந்த படம் 100 நாட்களுக்கு மேல் ஓடி மிகப்பெரிய வெற்றியை பெற்றுக் கொடுத்தது. அவர் வாங்கின 10 லட்சம் கடனும் அடைந்தது. அதோட இந்த படத்தை தயாரிப்பதற்காக தயாரிப்பாளர்களிடம் பெற்றிருந்த கடனையும் அடைந்துள்ளார் அழகப்பன்.
இதையும் படியுங்கள்... ‘வெந்து தணிந்தது காடு... கூல் சுரேஷ ஹீரோவா போடு’னு சொல்லும் அளவுக்கு.. ஆளே டோட்டலா மாறிய கூல் சுரேஷ்
ராமராஜன் நடிகராக மட்டுமில்லாமல் இயக்குனராகமும் பணியாற்றியுள்ளார். அதன்படி இவர் மண்ணுக்கேத்த பொண்ணு, மருதாணி, வணக்கம் யார் பேசுறது, மறக்க மாட்டேன், அம்மன் கோவில் வாசலிலே, நம்ம ஊரு ராசா, கோபுர தீபம் விவசாயி மகன், சீறிவரும் காளை உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். தற்போது ராமராஜனின் ரீ என்ட்ரியை காண ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.