விக்ரம் தந்த மவுசால் சம்பளத்தை சரமாரியாக உயர்த்தி... இந்தியன் 2 மூலம் நம்பர் 1 இடத்தை பிடித்த கமல்ஹாசன்

Published : Sep 25, 2022, 10:57 AM IST

Indian 2 : கமல்ஹாசன் நடிப்பில் உருவாகும் இந்தியன் 2 படத்தை லைகா நிறுவனமும், உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்து வருகிறது. 

PREV
14
விக்ரம் தந்த மவுசால் சம்பளத்தை சரமாரியாக உயர்த்தி... இந்தியன் 2 மூலம் நம்பர் 1 இடத்தை பிடித்த கமல்ஹாசன்

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த ஜூன் மாதம் வெளியான விக்ரம் திரைப்படம் பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றது. தமிழ்நாட்டில் அதிக வசூல் செய்த படம், அதிகம்பேர் பார்த்த படம், அதிகம் ஷேர் கொடுத்த படம் என நூறாண்டுகால தமிழ் சினிமா வரலாற்றில் எந்தஒரு படமும் படைத்திராத மாபெரும் வசூல் சாதனையை நிகழ்த்திக் காட்டி உள்ளது விக்ரம்.

24

விக்ரம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் தற்போது இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தின் ஷூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்திற்காக நடிகர் கமல்ஹாசன் வாங்கி உள்ள சம்பளம் பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது. கோலிவுட்டில் இதுவரை எந்த ஒரு முன்னணி நடிகரும் பெறாத அளவு மிகப்பெரிய தொகையை சம்பளமாக பெற்றுள்ளாராம் கமல்.

இதையும் படியுங்கள்... நகைச்சுவை நடிகர் போண்டா மணிக்கு உதவிக்கரம் நீட்டிய தனுஷ்

34

அதன்படி இந்தியன் 2-வில் நடிக்க நடிகர் கமல்ஹாசனுக்கு ரூ.150 கோடி சம்பளமாக வழங்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன்மூலம் தமிழ் திரையுலகில் அதிகம் சம்பளம் பெறும் நடிகராக உயர்ந்துள்ளார் கமல். இந்தியன் 2 படம் கடந்த 2019-ம் ஆண்டு தொடங்கப்பட்டபோது கமலின் சம்பளம் ரூ. 35 கோடி இருந்ததாம். ஆனால் சமீபத்தில் வெளியான விக்ரம் படம் விஸ்வரூப வெற்றிபெற்றதால், இந்தியன் 2 பட பிசினஸும் பன்மடங்கு உயர்ந்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு தான் தற்போது கமல் சம்பளத்தை உயர்த்தி உள்ளதாக கூறப்படுகிறது.

44

இந்தியன் 2 படத்தை லைகா நிறுவனமும், உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்து வருகிறது. அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்கிறார். கமலுடன் சித்தார்த், பாபி சிம்ஹா, பிரியா பவானி சங்கர், காஜல் அகர்வால் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.

இதையும் படியுங்கள்... வெந்து தணிந்தது காடு வெற்றி... சிம்புவுக்கு ரூ.1 கோடி மதிப்புள்ள சொகுசு காரை பரிசளித்த தயாரிப்பாளர்

Read more Photos on
click me!

Recommended Stories