ரஜினி படத்திற்கு அந்த விஷயத்தில் நோ சொல்லிட்டு... ஷாருக்கானுக்கு யஸ் சொன்னாரா நயன்? மும்பை சென்றதன் பின்னணி!

Published : May 02, 2023, 09:06 PM IST

நடிகை நயன்தாரா, ஷாருக்கானுக்காக தன்னுடைய கொள்கையை தளர்த்தி கொண்டதாக வெளியாகியுள்ள தகவல் தமிழ் ரசிகர்களை கோபமடைய செய்துள்ளது.   

PREV
16
ரஜினி படத்திற்கு அந்த விஷயத்தில் நோ சொல்லிட்டு... ஷாருக்கானுக்கு யஸ் சொன்னாரா நயன்? மும்பை சென்றதன் பின்னணி!

நடிகை நயன்தாரா முன்னணி நடிகை என்கிற இடத்தை அடைந்த பின்னர்... தான் நடிக்கும் எந்த படங்களிலும் புரோமோஷன்களிலும் கலந்து கொள்வது இல்லை. குறிப்பாக... தன்னை படத்தில் புக் பண்ண வரும், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்களிடம், இதற்கென அக்ரிமெண்ட் ஒன்றையும் போட வைக்கிறார் நயன். 
 

26

இவர் புரோமோஷன் பணிகளில் கலந்து கொள்வது இல்லை என்றாலும், அவருக்கும் இருக்கும் மார்க்கெட் காரணமாக தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் வேறு வழி இன்றி ஒப்புக்கொள்கிறார்கள். இவரை பார்த்தே, சில வளர்ந்து வரும் நடிகைகளும், புரோமோஷன் பணிகளில் கலந்து கொள்ளாமல் கெத்து காட்டுவதாகவும் சில விமர்சனங்கள் அவ்வப்போது முன்வைக்கப்பட்டு வருகிறது.

இளம் வயது குந்தவையாக நடித்தது... இந்த சன் டிவி சீரியல் நடிகையின் மகளா? யாருனு தெரிஞ்ச ஷாக் ஆகிடுவீங்க!
 

36

முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் படங்களின் புரமோஷன் பணிகளில் நயன்தாரா கலந்து கொள்வது இல்லை என்றாலும், தன்னுடைய தயாரிப்பில் நடிக்கும் படங்களுக்கு மட்டும் ஒரு சில பேட்டிகளை கொடுப்பதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் சமீபத்தில் வெளியான 'கனெக்ட்' படத்தை புரோமோட் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

46

இத்தனை நாள், இந்த கொள்கையை ரஜினி முதல்கொண்டு எந்த நடிகருக்குமே தளர்த்தி கொள்ளாத நயன்தாரா ஷாரூக்கானுக்காக தளர்த்திக்கொள்ள முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. நயன்தாரா, ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்துள்ள ஜவான் திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

மோதிரம் மாற்றி லிப் கிஸ் அடிச்சு... திருமணம் செஞ்சது சும்மா? அந்தர் பல்டியடித்த வனிதா.. காண்டான நெட்டிசன்ஸ்!
 

56

பான் இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ள இந்த படத்தின், புரமோஷன் பணிகளை மே முதல்வாரத்தில் இருந்து துவங்க படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும், இதில் நயன்தாராவும் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான பேச்சு வார்த்தை சம்பந்தமாகவே தற்போது நயன்தாரா மும்பை சென்றுள்ளாராம். இந்த தகவல் தற்போது வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
 

66

ரஜினி, விஜய் போன்ற போன்ற பிரபலங்களின் பட புரமோஷனில் கூட கலந்து கொள்ள மாட்டேன் என அடம் பிடிச்சுக்கு ஷாருக்குக்கு படத்துக்கு மட்டும் ஓகே சொல்றீங்களே? ஏன் இந்த ஓரவஞ்சனை என ஒரு நயனிடம் காரசாரமான கேள்விகளை எழுப்பி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இறந்து போன வனிதாவின் மூன்றாவது கணவர் பீட்டர் பால் வீட்டில் கட்டு காட்டாக இருந்த பணம்? ஷாக்கிங் தகவல்!

Read more Photos on
click me!

Recommended Stories