அந்த வகையில் நேற்றைய தினம் இப்படம் மூன்றே நாட்களில், உலகளவில் சுமார் 200 கோடி வசூலித்ததாக அதிகாரப்பூர்வமாக லைகா நிறுவனம் தெரிவித்தது. அதேபோல் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் விதமாக, ட்ரைலர் ஒன்றையும் வெளியிட்டிருந்தது பட குழு. இந்த புதிய ட்ரெய்லர் ரசிகர்களை குஷிப்படுத்தியது மட்டுமின்றி, பொன்னியின் செல்வன் படத்தின் மீதான ஆர்வத்தை அதிகரித்தது.