பிரான்சின் தலைநகரான பாரிசில் கடந்த மாதம் துவங்கப்பட்ட ஒலிம்பிக் போட்டிகள் இறுதி கட்டத்தை எட்டி வரும் நிலையில், அடுத்தடுத்து பல போட்டிகள் நடந்து வருகிறது. இதுவரை நடந்து முடிந்த போட்டிகளில் இந்தியாவுக்கு 3 வெண்கல பதக்கங்களே கிடைத்துள்ள நிலையில், 50 கிலோ எடை பிரிவுக்கான மல்யுத்த போட்டியில் கலந்து கொண்ட வீராங்கனை வினேஷ் போகத் அடுத்தடுத்த சுற்றுகளுக்கு தகுதி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறினார்.
100 கிராம் எடை அதிகமாக இருந்த காரணத்தால் வினேஷ் போகத்தை தகுதி நீக்கம் செய்த ஒலிம்பிக் குழு, இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற மற்றொரு வீராங்கனிக்கு, போட்டியே இல்லாமல் தங்க பதக்கத்தையும், வெள்ளி பதக்கம் யாருக்கும் கொடுக்கப்படாது என அறிவித்துள்ளது. இதை தொடர்ந்து மனஉளைச்சலில் வினேஷ் போகத் கீழே விழுந்து அழுவது போன்ற புகைப்படங்கள் வெளியாகி இந்தியர்கள் மனதை ரணமாக்கியது.
வினேஷ் போகத்தின் இந்த தகுதி நீக்கம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிலர் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வரும் நிலையில், பிரதமர் மோடி, முதல் நடிகை சமந்தா உள்ளிட்ட பல பிரபலங்கள் வினேஷ் போகத்துக்கு ஆதரவாக சமூக வலைத்தளத்தில் பதிவு போட்டு வருகிறார்கள். அந்த வகையில் நடிகை நயன்தாரா, "தலை நிமிர்ந்து நடங்கள் போராளியே... உங்கள் மதிப்பு வெற்றிகளால் அளக்கப்படுவது அல்ல, சாதனைகளை முறியடிக்கும் விதமான அன்பை நீங்கள் பெற்றுளீர்கள்" என கூறியுள்ளார்.
'கோட்' பட புரோமோஷன்...! இதை மட்டும் பண்ணவே கூடாது.. ரசிகர்களுக்கு ஸ்ட்ரிக்ட் உத்தரவு போட்ட தளபதி.!