Namitha: குப்ப தொட்டியிலிருந்து எடுத்து வச்சாங்க; திருமணத்தின் போது என்ன நடந்தது? நமீதா பகிர்ந்த சுவாரஸ்யம்!

Published : Feb 17, 2025, 07:59 PM ISTUpdated : Feb 17, 2025, 09:27 PM IST

காதலர் தினத்தை முன்னிட்டு நமீதாவும், அவரது கணவர் வீர் இருவரும் காதல், திருமண வாழ்க்கை குறித்து அளித்த பேட்டி சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.  

PREV
16
Namitha: குப்ப தொட்டியிலிருந்து எடுத்து வச்சாங்க; திருமணத்தின் போது என்ன நடந்தது? நமீதா பகிர்ந்த சுவாரஸ்யம்!
தமிழில் எங்கள் அண்ணா மூலம் அறிமுகம்

விஜயகாந்த் நடிப்பில் வந்த எங்கள் அண்ணா படம் மூலமாக தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை நமீதா. ஹீரோயினாக ஏராளமான படங்களில் நடித்தார். அழகு, கவர்ச்சி ஆகியவற்றின் மூலமாக அடுத்தடுத்து வாய்ப்புகள் இவருக்கு குவிந்தது. ஆனால், அளவுக்கு அதிகமான உடல் எடை காரணமாக நாளடைவில் பட வாய்ப்புகள் இழந்தார்.
 

26
நமீதா நடித்த படங்கள்

மகாநடிகர், ஏய், பம்பர கண்ணாலே, ஆணை, அழகிய தமிழ் மகன், நான் அவன் இல்லை, பாண்டி, இளமை ஊஞ்சல், இளைஞன், பொட்டு உள்ளிட்ட படங்களில் நமீதா நடித்துள்ளார். ரசிகர்களை மச்சான்ஸ் என்று அழைப்பது அவரது பழக்கம். இதற்காகவே ரசிகர்கள் ஏங்குவதும் உண்டு. சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நடிகைகளில் நமீதாவும் ஒருவர். ஆனால், கூடுதலான உடை எடை காரணமாக திரையுலகில் இருந்து பார்சல் செய்யப்பட்டார்.

நிறையா பேசாதீங்க; செயலில் காட்டுங்க - த.வெ.க தலைவர் விஜய்க்கு அறிவுரை சொன்ன நமீதா!
 

36
மாடலிங் மூலம் தன்னுடைய கரியரை  ஆரம்பித்த நமீதா

தமிழில் மட்டுமில்லாமல் நமீதா தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாள மொழி படங்களிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். மாடலிங் மூலம் தன்னுடைய கரியரை  ஆரம்பித்த நமீதா 1998 ஆம் ஆண்டு மிஸ் சூரத் பட்டம் வென்றார். அப்போது அவருக்கு வயது 17. இதையடுத்து 2001 ஆம் ஆண்டு மிஸ் இந்தியா அழகிப் போட்டியில் போட்டியிட்டு 3ஆவது இடம் பிடித்தார். இதன் மூலமாக நிறைய டிவி விளம்பரங்களில் நடித்த நமீதா முதலில் தெலுங்கு சினிமாவில் தான் ஹீரோயினாக அறிமுகம் ஆகும் வாய்ப்பு கிடைத்தது.

 

46
2017ஆம் ஆண்டு வீரேந்திர சௌத்ரி என்பவரை காதலித்து திருமணம்

சினிமாவில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் போதே 2017ஆம் ஆண்டு வீரேந்திர சௌத்ரி என்பவரை காதலித்து திருமணம் செய்தார். இவர்களுக்கு தற்போது இரட்டை குழந்தைகள் உள்ளனர். அரசியலிலும் இணைந்து தேசிய கட்சி உறுப்பினராக உள்ளார். இந்த நிலையில் தான் காதலர் தினத்தை முன்னிட்டு கணவருடன் இணைந்து யூடியூப் சேனல் ஒன்றிற்கு நமீதா பேட்டி அளித்துள்ளனர். அதில், தங்களது காதல் வாழ்க்கை, திருமணம் மற்றும் தாம்பத்திய வாழ்க்கை குறித்து பகிர்ந்து கொண்டுள்ளனர்.

மீனாட்சி அம்மன் கோவிலில் என்னை அசிங்கப்படுத்திட்டாங்க; ஆக்‌ஷன் எடுங்க! அமைச்சரிடம் நடிகை நமீதா பரபரப்பு புகார்
 

56
குப்பையில் இருந்து எடுத்து தலையில் வைத்தார்கள்:

கணவர் குறித்து நமீதா பேசும் போது, "முதல் முறையாக நான் வீரேந்திர சௌத்ரியை பார்க்கும் போது அவர் நல்ல உடல் தோற்றத்துடன் இருந்தார். நான் தான், அவரை பார்த்தேன். ஆனால், அவர் என்னை கண்டுகொள்ளவில்லை. அவர் அமைதியான கேரக்டர். ஆனால், நான் அவருக்கு ஆபோசிட். கல்யாணத்திற்கு பிறகு என்னை மாற்றிக் கொண்டேன். அவர் தான் எனக்கு கிடைத்த வைரம் என்றெல்லாம் தனது அம்மா கூறியதாக தெரிவித்துள்ளார்.
 

66
குப்பையில் இருந்து எடுத்து தலையில் வைத்தார்கள்:

மேலும், திருப்பதியில் தான் திருமணம் நடந்தது. தெலுங்கு முறைப்படி தான் திருமணமே நடைபெற்றது. அந்த திருமணத்தின் போது என்னுடைய தலையில் வெற்றிலை, சீரகம் போன்ற மங்கள பொருட்களை என் தலையில் வைத்தார்கள். ஆனால் நான் அதனை குப்பை என்று நினைத்துக் கொண்டு குப்பை தொட்டியில் போட்டுவிட்டேன். பின்னர் எங்கே அந்த வெற்றிலை என என்னிடம் கேட்டபோது அதை குப்பை தொட்டியில் போட்டுவிட்டேன் என சொன்னேன். ஆனால் அந்த வெற்றிலையை மீண்டும் குப்பை தொட்டியில் இருந்து எடுத்து என் தலையில் வைத்தார்கள் அப்படி செய்வார்கள் என நான் எதிர்பார்க்கவில்லை என கூறியுள்ளார்.

ஜிவி பிரகாஷை தொடர்ந்து விவாகரத்து அறிவிப்பை வெளியிட போகிறாரா நமீதா? வேறு வழியின்றி அவரே கொடுத்த விளக்கம் இதோ

click me!

Recommended Stories